தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சி.ஏ., தேர்வு முடிவு: 19.88% பேர் தேர்ச்சி

சி.ஏ., தேர்வு முடிவு: 19.88% பேர் தேர்ச்சி

சி.ஏ., தேர்வு முடிவு: 19.88% பேர் தேர்ச்சி


UPDATED : ஜூலை 12, 2024 12:00 AM

ADDED : ஜூலை 12, 2024 09:34 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 12, 2024 12:00 AM ADDED : ஜூலை 12, 2024 09:34 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை :
இந்திய பட்டய கணக்காளர் என்ற சி.ஏ., தேர்வில், 19.88 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்திய பட்டய கணக்காளர் அமைப்பான ஐ.சி.ஏ.ஐ., சார்பில், சி.ஏ., என்ற பட்டய கணக்காளர் தேர்வு நடத்தப்படுகிறது. முதல்நிலை தகுதித்தேர்வு, இடைநிலை தேர்வு மற்றும் இறுதி தேர்வு என, மூன்று நிலைகள் நடத்தப்படுகின்றன.

இதில், இடைநிலை மற்றும் இறுதித் தேர்வுகள், இந்த ஆண்டு மே மாதம் நடந்தன. இதற்கான முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இறுதித்தேர்வில், டில்லியை சேர்ந்த ஷிவம் மிஸ்ரா என்பவர், 83.33 சதவீதம் மதிப்பெண் பெற்று, தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

இறுதித் தேர்வில் முதல் தொகுதியில், 74,887 பேர் பங்கேற்று, 20,479 பேரும்; 2வது தொகுதியில், 58,891 பேர் பங்கேற்றதில், 21,408 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இரண்டு பிரிவுகளிலும், 35,819 பேர் தேர்வு எழுதி, 7,122 பேர், அதாவது, 19.88 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இடைநிலை தேர்வில் முதல் தொகுதியில், 1.17 லட்சம் பேர் பங்கேற்று, 31,978 பேரும்; 2ம் தொகுதியில், 71,145 பேர் பங்கேற்று, 13,008 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இரண்டு தொகுதியிலும் சேர்த்து, 59,956 பேர் தேர்வு எழுதி, 11,041 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது, 18.42 சதவீதம். தேர்வு முடிவுகள் குறித்த விபரங்களை, https://www.icai.org/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us