UPDATED : மார் 16, 2026 04:27 PM
ADDED : மார் 16, 2026 04:29 PM
தேனி:
தமிழக கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் (டான்பிநெட்) பாரத்நெட் திட்டத்தின் கீழ் கிராமங்களுக்கு இணைய சேவைகளை வழங்க தொழில் பங்கீட்டாளர்கள் விண்ணப்பிக்கலாம் என் கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.
அவர் தெரிவித்துள்ளதாவது, தமிழகத்தில் 'பாரத்நெட்' திட்டப் பணிகள் 96 சதவீதம் முடிந்துள்ளது. 37 மாவட்டங்களிலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது 2 தொழில் பங்கீட்டாளர்களை தேர்வு செய்து, கிராமப் பகுதிகளில் தடையில்லா இணைய சேவைகள் வழங்கப்பட உள்ளது. இதற்கு தொழில் பங்கீட்டாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
ஒரு விண்ணப்பதாரர் அதிகபட்சம் 2 மாவட்டங்களுக்கு மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் நிறுவனம் அவர்களின் வசிக்கும் மாவட்டமாக இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் தொழில் பங்கீட்டாளர்கள் தடையில்லா இணைய சேவை வழங்குதல், சேவை தடைகளை விரைவாக சரிசெய்தல், சேவை தரத்தை பராமரித்தல் ஆகியவை பொறுப்புகளை மேற்கொள்ள வேண்டும்.
டான்பிநெட் இணையதளம் (https://tanfinet.tn.gov.in) மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஏப்., 10 விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும்.

