காலியாக உள்ள பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
காலியாக உள்ள பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
UPDATED : செப் 12, 2025 12:00 AM
ADDED : செப் 12, 2025 08:25 AM

சென்னை:
புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் புதுச்சேரி மற்றும் காரைக்கால் வளாகங்களில் 2025-26 கல்வியாண்டில் காலியாக உள்ள பல்வேறு நான்காண்டு இளநிலை, பி.டெக் மற்றும் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த பட்டப்பிரிவுகளுக்கு சேர்க்கை, 2025-ம் ஆண்டு பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் நேரடி முறையில் நடைபெறும்.
ஆர்வமுள்ள மாணவர்கள் சம்பந்தப்பட்ட துறைகள் மற்றும் மையங்களை 2025 செப்டம்பர் 17 அன்று காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நேரடியாக அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பொது நுழைவுத் தேர்வில் பங்கேற்காதவர்கள் இப்படிப்புகளுக்கான சேர்க்கைக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். நேரில் வரும்வர் தேவையான அனைத்து அசல் சான்றிதழ்களையும் எடுத்துவர வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் உடனடியாக ஆன்லைன் வழியாக கட்டணத்தை செலுத்த வேண்டும் என்றும் பதிவாளர் முனைவர் ரஜ்னீஷ் பூட்டானி தெரிவித்துள்ளார்.