UPDATED : டிச 19, 2025 09:57 PM
ADDED : டிச 19, 2025 10:04 PM

திருநெல்வேலி:
பல்கலை ஊழியர்கள் கட்டாயம் இ.எஸ்.ஐ., திட்டத்தில் பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மண்டல இ.எஸ்.ஐ.சி. துணை மண்டல அலுவலக பொறுப்பு இணை இயக்குநர் பாஸ்கர் கூறியதாவது:
அரசாணை இருந்தும் பல்கலைகள், ஊழியர்களை இ.எஸ்.ஐ., திட்டத்தில் பதிவு செய்யாமல் உள்ளனர். பலமுறை அறிவுறுத்தியும் விதிகளை பின்பற்றாததால் பல்கலை வங்கி கணக்குகள் முடக்கப்படும் என, எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அவர்களிடம், நிலுவையில் உள்ள பங்களிப்பு தொகை வட்டியுடன் வசூலிக்கப்படும். ஒப்பந்த, தற்காலிக, கவுரவ ஊதிய ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத ஊழியர்கள் அனைவரையும் பதிவு செய்ய வேண்டும்.
தவறினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்கு தொடரப்படும். துாத்துக்குடியில், 100 படுக்கை இ.எஸ்.ஐ., மருத்துவமனை விரைவில் திறக்கப்படும். கன்னியாகுமரியில் புதிய மருத்துவமனை கட்டப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

