தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ பயன்பாடின்றி சீரழியும் சிற்பக்கல்லுாரி வேன்

பயன்பாடின்றி சீரழியும் சிற்பக்கல்லுாரி வேன்

பயன்பாடின்றி சீரழியும் சிற்பக்கல்லுாரி வேன்


UPDATED : மே 09, 2024 12:00 AM

ADDED : மே 09, 2024 10:47 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 09, 2024 12:00 AM ADDED : மே 09, 2024 10:47 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மாமல்லபுரம்:
கலை, பண்பாட்டுத்துறையின்கீழ், மாமல்லபுரத்தில் அரசு கட்டடம் மற்றும் சிற்பக்கலைக் கல்லுாரி இயங்குகிறது. மரபு சிற்பம், கட்டடம், ஓவியக் கலைகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.

மாணவர்கள் மற்றும் கல்லுாரி நிர்வாகத்தினர் போக்குவரத்து பயன்பாட்டிற்காக, ஏழு ஆண்டுகளுக்கு முன், டெம்போ டிராவலர் வேன் வழங்கப்பட்டது. தற்போது வரை, அதற்கு ஓட்டுனர் நியமிக்கப்படவில்லை.

துவக்கத்தில், பயண தேவைக்கேற்ப தற்காலிக ஓட்டுனர் நியமித்து பயன்படுத்தி வந்தனர். நாளடைவில் செலவு, டீசல் தேவை கருதி பயன்படுத்துவது நிறுத்தப்பட்டது. அது, தற்போது கல்லுாரி வளாகத்தில், பல ஆண்டுகளாக ஓரங்கட்டி வைக்கப்பட்டு, துருப்பிடித்து சீரழிந்து வருகிறது.

இக்கல்லுாரி, நகர்ப் பகுதியிலிருந்து 2 கி.மீ., தொலைவில் உள்ள நிலையில், மாணவ - மாணவியர் கல்லுாரி வந்துசெல்ல சிரமப்படுகின்றனர். அவர்களின் காலை, மாலை பயண அவசியம் கருதி, வேனை பழுது பார்த்து, துறை சார்பில் ஓட்டுனர் நியமித்து இயக்க வேண்டும் என, மாணவர்கள் வலியுறுத்துகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us