குரூப் 2 தேர்விற்கு தயார் 461 தேர்வர்கள் பங்கேற்பு
குரூப் 2 தேர்விற்கு தயார் 461 தேர்வர்கள் பங்கேற்பு
UPDATED : மார் 14, 2026 12:16 PM
ADDED : மார் 14, 2026 12:18 PM
விருதுநகர்:
தமிழகம் முழுவதும் பிப்., 8ல் ரத்து செய்யப்பட்ட டி.என்.பி.எஸ்.சி.,யின் குரூப் 2, 2ஏ முதன்மை எழுத்துத் தேர்வு நாளை (மார்ச் 15) நடக்கிறது.
விருதுநகர் கே.வி.எஸ்., மேல்நிலைப் பள்ளியில் காலை 229, மதியம் 232 என 461 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர். காலை தேர்வுக்கு 08:30 மணிக்கு தேர்வு கூடத்திற்கு ஹால் டிக்கெட்டுடன் வர வேண்டும்.
காலை 09:00 மணிக்கு அனுமதியில்லை. மதிய தேர்வுக்கு 01:30 மணிக்கு தேர்வு கூடத்திற்கு அனுமதிக்கப்படுவர்.
மாலை 05:30 மணிக்கு தேர்வு அறையில் இருந்து வெளியேறலாம். தேர்வர்கள் தங்களுடைய புகைப்பட அடையாள அட்டைகளான ஆதார் அட்டை, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ் போன்றவற்றின் அசல் அல்லது ஜெராக்ஸ் எடுத்து வர வேண்டும். கருப்புநிற பந்துமுனை பேனா மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
மின்னணு சாதனங்கள் அனுமதியில்லை. எளிய அனலாக் கைகடிகாரங்கள் பயன்படுத்தலாம். அரசுப் போக்குவரத்து கழகத்தின் மூலம் சிறப்பு பஸ் வசதிகள் நாளை காலை 06:00 மணி முதல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
