UPDATED : செப் 23, 2025 12:00 AM
ADDED : செப் 23, 2025 09:19 AM

கோவை:
கோவை வேளாண் பல்கலையில், வேளாண் பொறியியல் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், பிரிட்டன் டீசைடு பல்கலையின் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு துறையின் இணை டீன் டேவிட் ஹியூஸ் பங்கேற்ற விரிவுரை நடந்தது.
வேளாண் பொறியியல் கல்லுாரி டீன் ரவிராஜ் பேசுகையில், ''பல்கலைகளில் ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கங்களை வலுப் படுத்துவது அவசியம். இதில், சர்வதேச ஒத்துழைப்பு முக்கியத்துவம் பெறுகிறது,'' என்றார்.
இணை டீன் டேவிட் ஹியூஸ், தொழில் துறை ஆராய்ச்சி மற்றும் ஆராய்ச்சி மருத்துவம் என்ற தலைப்பில் விரிவுரையாற்றினார். ஆராய்ச்சியில் நிலவும் பொதுவான சவால்கள், ஆராய்ச்சிகட்டுரைகளை வெளியிடுவது தொடர்பாக விளக்கமளித்தார்.
நிகழ்ச்சியில் பதப்படுத்துதல் மற்றும் உணவு பொறியியல் துறை தலைவர் பாலகிருஷ்ணன், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை பேராசிரியர் மகேந்திரன் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.