sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 22, 2026 ,பங்குனி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

முதல் மொழி பாடத்தில் 202 பேர் ஆப்சென்ட்

/

முதல் மொழி பாடத்தில் 202 பேர் ஆப்சென்ட்

முதல் மொழி பாடத்தில் 202 பேர் ஆப்சென்ட்

முதல் மொழி பாடத்தில் 202 பேர் ஆப்சென்ட்


UPDATED : மார் 21, 2026 11:38 AM

ADDED : மார் 21, 2026 11:40 AM

Google News

UPDATED : மார் 21, 2026 11:38 AM ADDED : மார் 21, 2026 11:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோலார்:
கோலார் மாவட்டத்தில் உள்ள, 65 மையங்களில், 18,896 மாணவர்கள் கடந்த புதன்கிழமை, எஸ்.எஸ்.எல்.சி., முதல் மொழி தேர்வை எழுதினர். தேர்வுக்கு பதிவு செய்திருந்த, 19,098 மாணவர்களில், 202 மாணவர்கள், 'ஆப்சென்ட்' ஆகினர். 98.94 சதவீதம் பேர் வருகையுடன் தேர்வு சுமூகமாக நடைபெற்றது.

காலை, 10:00 மணி முதல் மதியம், 1:15 வரை நடைபெற்ற இந்த தேர்வில், முதல் மொழிபாடத்தின் கேள்விகள் எளிதாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.

தேர்வு எந்தவித குழப்பமும் இன்றி மிகவும் வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக, கோலார் மாவட்ட கல்வி அதிகாரி அல் மாஸ் பர்வீன் தாஜ் தெரிவித்தார்.

மாவட்ட கலெக்டர் எம்.ஆர்.ரவி பல்வேறு தேர்வு மையங்களை நேரில் பார்வையிட்டு, அங்குள்ள ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். அவருடன் எஸ்.எஸ்.எல்.சி., மாவட்ட நோடல் அதிகாரி சங்கரே கவுடாவும் உடன் சென்றார்.

பங்காருபேட்டை தாலுகாவில், எட்டு மையங்களில் முதல் மொழி தேர்வுக்கு 2,547 பேர் பதிவு செய்திருந்தனர்; அவர்களில், 21 பேர் தேர்வு எழுதவில்லை. தங்கவயல் தாலுகாவில், ஒன்பது மையங்களில், 3,316 மாணவ, மாணவியர் பதிவு செய்திருந்தனர். அவர்களில், 36 பேர் ஆப்சென்ட்.

கோலார் தாலுகாவில், 18 மையங்களில், 4,811 பேர் பதிவு செய்திருந்தனர். அவர்களில், 37 பேர் வரவில்லை. மாலுார் தாலுகாவில் எட்டு மையங்களில் 3,005 பேர் பதிவு செய்திருந்தனர். அவர்களில், 33 பேர் தேர்வுக்கு வரவில்லை. முல்பாகல் தாலுகாவின், 12 மையங்களில் 2,865 பேர் பதிவு செய்திருந்தனர். அவர்களில், 54 பேர் வரவில்லை.

சீனிவாசப்பூர் தாலுகாவில், 10 மையங்களில், 2,554 பேர் பதிவு செய்திருந்தனர். அவர்களில், 21 பேர் வரவில்லை. மொத்தம், 202 பேர் தேர்வு எழுத வரவில்லை.

மாவட்ட அளவிலான அதிகாரிகள், மாநில ஊழல் தடுப்பு பணியாளர்கள், மாவட்டத்தில் உள்ள பல்வேறு தேர்வு மையங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

நான்கு நாட்கள் விடுமுறைக்கு பிறகு அறிவியல் பாடத் தேர்வு, வரும் 23ம் தேதி நடைபெறும். ஏப்ரல் 2 அன்று எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு நிறைவடையும்.






      Dinamalar
      Follow us