தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/10, பிளஸ் 2 வகுப்பு மாதிரி வினாத்தாள் விற்பனை

10, பிளஸ் 2 வகுப்பு மாதிரி வினாத்தாள் விற்பனை

10, பிளஸ் 2 வகுப்பு மாதிரி வினாத்தாள் விற்பனை


UPDATED : நவ 21, 2024 12:00 AM

ADDED : நவ 21, 2024 03:40 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 21, 2024 12:00 AM ADDED : நவ 21, 2024 03:40 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில், 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்கள், பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் வகையில், மாதிரி வினாத்தாள் மற்றும் தீர்வுப் புத்தகம் அடங்கிய, 11 புத்தகங்கள் விற்பனையை, அரசு துவங்கியுள்ளது.

அரசு செய்திக்குறிப்பு:

தமிழகம் முழுதும் உள்ள 10, பிளஸ் 2 வகுப்பு மாணவர்கள், பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் வகையில், சிறந்த பாட வல்லுனர்களைக் கொண்டு, தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும், மாதிரி வினாத்தாள் மற்றும் தீர்வுப் புத்தகங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.

இதில், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு 3 புத்தகங்கள், பிளஸ் 2 மாணவர்களுக்கு 8 என, 11 புத்தகங்கள் அச்சிடப்பட்டு, மாவட்ட விற்பனை மையங்களில் விற்கப்படுகின்றன.

தமிழ் மற்றும் ஆங்கில வழியில் அச்சிடப்பட்ட, மாதிரி வினாத்தாள் மற்றும் தீர்வுப் புத்தகம் அடங்கிய தொகுப்பு, குறைந்தபட்சம் 70 ரூபாயிலிருந்து அதிகபட்சம் 175 ரூபாய் வரையான விலையில் கிடைக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us