தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ வேலை கிடைச்சிருச்சு! 128 மாற்றுத்திறனாளிகளுக்கு சுடச்சுட கிடைத்தது உத்தரவு

வேலை கிடைச்சிருச்சு! 128 மாற்றுத்திறனாளிகளுக்கு சுடச்சுட கிடைத்தது உத்தரவு

வேலை கிடைச்சிருச்சு! 128 மாற்றுத்திறனாளிகளுக்கு சுடச்சுட கிடைத்தது உத்தரவு


UPDATED : செப் 30, 2024 12:00 AM

ADDED : செப் 30, 2024 10:34 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 30, 2024 12:00 AM ADDED : செப் 30, 2024 10:34 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை:
கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, கரூர் மாவட்டங்களை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கான மண்டல அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், சித்தாபுதுார் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

58 நிறுவனங்களில், 1,127 பணியிடங்கள் நிரப்ப இருப்பதாக அறிவிக்கப்பட்டது. எந்தெந்த நிறுவனத்தில் என்ன கல்வித்தகுதிக்கு வேலைவாய்ப்பு இருக்கிறதென்கிற விபரம், நுழைவாயிலில் வைக்கப்பட்டது. மொத்தம், 14 அறைகளில், நிறுவனத்தினர் ஸ்டால் அமைத்து, மாற்றுத்திறனாளிகளிடம் நேர்காணல் நடத்தினர்.

மொத்தம், 112 ஆண்கள், 50 பெண்கள் என, 162 மாற்றுத்திறனாளிகள் வேலை கேட்டு, பதிவு செய்தனர். அவர்களில், கோவை மாவட்டம் - 71, ஈரோடு - 27, கரூர் - 14, திருப்பூர் - 8, நீலகிரி - 8 என, 128 பேருக்கு உடனடியாக பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது.

உத்தரவு நகலை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அரசு செயலர் சிஜூ தாமஸ் வழங்கினார். கலெக்டர் கிராந்திகுமார், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் முன்னிலை வகித்தனர். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன் வரவேற்றார்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலர் சிஜூ தாமஸ் கூறுகையில், மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு முகாம், ரெகுலராக நடத்த இருக்கிறோம். 10 ஆயிரம் முதல், 25 ஆயிரம் ரூபாய் வரை, பணிக்கேற்ப சம்பளம் வழங்குவர், என்றார்.

அரசு செயலரை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் பணிபுரியும் ஒப்பந்த பணியாளர்கள் சந்தித்து, ஏழு ஆண்டுகளாக ஒப்பந்த பணியாளர்களாக பணிபுரிகிறோம்; மாதம், 15 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது; சம்பளம் உயர்த்தித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us