ADDED : நவ 30, 2024 08:41 PM
புதுடில்லி:அதிவேகமாக வந்த கார் மோதி இளைஞர் பலத்த காயம் அடைந்தார்.
மேற்கு டில்லி பஞ்சாபி பாக் மடிபூரில் 28ம் தேதி அதிகாலை ஒரு கார் அதிவேகமாக வந்தது. அப்போது, சாலையைக் கடந்த நிகில்,25, என்பவர் மீது அந்தக் கார் மோதி தூக்கி வீசப்பட்டார். விபத்து ஏற்படுத்திய கார் நிற்காமல் அதிவேகமாக சென்றது. தகவல் அறிந்து வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் கிடந்த நிகிலை மீட்டு, அருகில் இருந்த பாலாஜி மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்கு முதலுதவி செய்து, ராம் மனோகர் லோகியா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்தப் பகுதியில் இருந்த கண்காணிப்புக் கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்து, கார் உரிமையாளர் குறித்து விசாரித்து வருகின்றனர்.
விபத்து காட்சி, சமூகவலைதளங்களில் நேற்று வேகமாக பரவியது.

