சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி; பிரமாணப்பத்திரத்தை வாபஸ் பெற கேரள அரசுக்கு அண்ணாமலை வலியுறுத்தல்
சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி; பிரமாணப்பத்திரத்தை வாபஸ் பெற கேரள அரசுக்கு அண்ணாமலை வலியுறுத்தல்
ADDED : செப் 22, 2025 08:04 PM

பந்தளம்: சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் பிரமாணப்பத்திரத்தை கேரள அரசு திரும்பப் பெற வேண்டும் என்று முதல்வர் பினராயி விஜயனுக்கு தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
அவரது எக்ஸ் தளப்பதிவு; கேரள மாநிலம் பந்தளத்தில் நடந்த சபரிமலை சமரக்ஷண சங்கமத்தில் பங்கேற்றது மகிழ்ச்சியளிக்கிறது. இது பிரம்மச்சாரியான ஐயப்பனின் புனிதத்தைக் காக்கும் ஒரு தெய்வீக நிகழ்ச்சி.
கம்யூனிஸ்டுகள் மற்றும் அவர்களின் கூட்டணியான திமுகவும், தேர்தல் சமயத்தில் நடத்தும் அரசியல் நாடகத்தால், லட்சக்கணக்கான மக்களின் நம்பிக்கையை சீர்குலைத்து விடக் கூடாது. சனாதன தர்மத்தைப் பாதுகாக்க ஒரு தீர்மானமான அரசியல் மாற்றத்திற்கான நேரம் தான் இது.
உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு தாக்கல் செய்துள்ள, சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான பிரமாணப்பத்திரத்தை முதல்வர் பினராயி விஜயன் திரும்பப் பெற வேண்டும். அதேவேளையில், 2018-19ல் சபரிமலைக்காக நடத்தப்பட்ட போராட்டங்களில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்காக பக்தர்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறேன், இவ்வாறு அவர் கூறினார்.