sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாதது ஏன்? காங்., - எம்.எல்.ஏ., பேச்சுக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

/

கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாதது ஏன்? காங்., - எம்.எல்.ஏ., பேச்சுக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாதது ஏன்? காங்., - எம்.எல்.ஏ., பேச்சுக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாதது ஏன்? காங்., - எம்.எல்.ஏ., பேச்சுக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு


ADDED : பிப் 02, 2024 11:04 PM

Google News

ADDED : பிப் 02, 2024 11:04 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் குறைந்த இடங்களில் வெற்றி பெற்றால், ஐந்து வாக்குறுதி திட்டங்களும் நிறுத்தப்படும்' என, காங்கிரஸ் எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணா கூறியதற்கு, பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

கடந்த சட்டசபை தேர்தலின் போது, அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம், 200 யூனிட் இலவச மின்சாரம், குடும்ப தலைவியருக்கு மாதம் 2,000 ரூபாய், அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் 10 கிலோ இலவச அரிசி, வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் 3,000 ரூபாய் உதவித்தொகை என்று, ஐந்து வாக்குறுதிகளை காங்கிரஸ் அளித்தது.

* அரசு திணறல்

தேர்தலில் வெற்றி பெற்ற பின், படிப்படியாக வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது. இதில் இலவச அரிசி திட்டத்தை அமல்படுத்துவதற்கு கர்நாடக அரசு திணறியது. வேலையில்லா பட்டதாரிகளுக்கு உதவித்தொகை, கடந்த மாதத்தில் தான் நிறைவேற்றப்பட்டது.

இந்த ஐந்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற, ஆண்டுக்கு 56,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்க வேண்டும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து எட்டு மாதங்கள் ஆகிறது.

அரசு பஸ்களில் இலவச பயணம் திட்டம், பெண்களுக்கு வசதியாக இருந்தது. ஆனால், அரசுக்கு இதனால் நஷ்டமே. கடந்த சில மாதங்களாக பெண்கள் வங்கிக்கணக்கிற்கு 2,000 ரூபாய் சரியாக செல்வதே இல்லை.

இலவசமாக 200 யூனிட் கொடுத்துவிட்டு, மறுபுறம் மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளனர். பத்து கிலோ அரிசி என்று கூறிவிட்டு, ஐந்து கிலோ தான் கொடுக்கின்றனர். மீதம் ஐந்து கிலோவுக்கு பணம் என்று கூறினர். அதுவும் சரியாக கிடைக்கவில்லை. வேலையில்லா பட்டதாரிகள் உதவித்தொகை விண்ணப்பத்திலும் ஏராளமான கட்டுப்பாடுகள் விதித்து உள்ளனர்.

* வளர்ச்சி பணி முடக்கம்

வாக்குறுதிகளை நிறைவேற்ற நிதி ஒதுக்குவதால், எம்.எல்.ஏ.,க்கள் தொகுதியிலும் வளர்ச்சி பணிகள் நடக்கவில்லை. இதனால் அரசு மீது எம்.எல்.ஏ.,க்கள் கோபத்தில் உள்ளனர். லோக்சபா தேர்தலுக்கு பின்னர், வாக்குறுதி திட்டங்களை அரசு நிறுத்திவிடும் என்று எதிர்க்கட்சியினர் கூறி வருகின்றனர். இதை உண்மை என்று நிரூபிப்பது போல, மாகடி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணா பேசி உள்ளார்.

'லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெறாவிட்டால், வாக்குறுதி திட்டங்கள் நிறுத்தப்படும். இதுகுறித்து முதல்வரிடம் பேசுவேன்' என்று கூறி உள்ளார். ஆனால் 'வாக்குறுதிகள் திட்டங்கள் நிறுத்தப்படாது' என்று, முதல்வர் சித்தராமையா கூறி உள்ளார்.

எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணா கருத்து, கர்நாடகாவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

-------

புல் அவுட்

* வளர்ச்சி பணிகள் செய்ய...

அரசின் ஐந்து வாக்குறுதி திட்டங்கள், அனைவருக்கும் கிடைக்கவில்லை. பெண்களுக்கு இலவச பஸ் பயணம் மூலம், ஆட்டோ, வாடகை கார் டிரைவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து உள்ளனர். மாதம் 2,000 ரூபாய் பெறுவதற்காக, எல்லாரும் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க துவங்கினர். நிறைய பேர் விண்ணப்பிப்பதால், ரேஷன் கார்டு கொடுப்பது தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது. வாக்குறுதி திட்டங்களை நிறுத்திவிட்டு, அதற்கு பயன்படுத்தும் பணத்தில், வளர்ச்சி பணிகள் செய்ய வேண்டும்.

- ஜமுனா ராணி

இல்லத்தரசி

ராமசந்திரபுரம், பெங்களூரு

============

* மின் கட்டணம் செலுத்தவில்லை!

எங்கள் வீட்டின் மாத மின்கட்டணம் முன்பு 500 ரூபாய் வந்தது. 200 யூனிட்டிற்கு கீழ், இலவச மின்சார திட்டம் கொண்டு வந்ததில் இருந்து, ஏழெட்டு மாதமாக மின் கட்டணம் செலுத்தவில்லை. இதற்கு முன்பு மெஜஸ்டிக் பஸ்சில் செல்ல, பத்து ரூபாய் இருக்க வேண்டும். இப்போது ஆதார் அட்டை காண்பித்து போய் விடலாம். மாதம் 2,000 ரூபாயும் கிடைக்கிறது. இதில் குழந்தைகளுக்கு ஏதாவது வாங்கி கொடுப்பேன். இப்படி இருக்கும் நிலையில், இவற்றை எல்லாம் நிறுத்த கூடாது. வாக்குறுதிகளை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்.

- தேவி

இல்லத்தரசி

சாமுண்டிநகர், பெங்களூரு

==========

நம்பிக்கை பறிப்பு!

வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாத உதவித்தொகை கொடுக்கும் திட்டம், கடந்த மாதம் தான் துவங்கி உள்ளது. தேர்தலில் காங்கிரஸ் குறைந்த தொகுதிகளில், வெற்றி பெற்றால் வாக்குறுதிகளை நிறுத்த வேண்டும் என்று, எம்.எல்.ஏ., கூறியது சரி அல்ல. தேர்தல் வெற்றிக்காக வாக்குறுதிகளை அளித்துவிட்டு, பின்னர் திரும்ப பெறுவதாக சொல்ல கூடாது. மாத உதவித்தொகை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான், வேலையில்லா பட்டதாரிகள், காங்கிரசை ஆதரித்து உள்ளனர். அவர்கள் நம்பிக்கையை ஏமாற்றும் வேலையில் ஈடுபட கூடாது.

- கிருத்திகா

கல்லுாரி மாணவி

ஷிவமொகா

==========

* பெண்கள் தலைநிமிர்ந்து நிற்க...

வீட்டில் சும்மா தானே இருக்கிறாய் என்று மட்டம் தட்டும் ஆண்கள் மத்தியில், பெண்கள் தலைநிமிர்ந்து நிற்க 2,000 ரூபாய் உதவுகிறது. மாத கடைசியில் இந்த 2,000 ரூபாயை வைத்து, நிறைய குடும்பங்கள் இயங்குகிறது. பெண்கள் தாங்கள் நினைத்த இடத்திற்கு செல்ல, இலவச பஸ் திட்டம் உள்ளது. வாக்குறுதி திட்டங்களை நிறுத்தினால் பெண்கள் பாதிக்கப்படுவர். தேர்தலில் வெற்றி, தோல்வி வேறு. தேர்தலையும், வாக்குறுதிகளையும் ஒன்று சேர்க்க கூடாது. எக்காரணத்திற்கும் வாக்குறுதிகளை நிறுத்த கூடாது.

- ரேகா

தனியார் ஆசிரியை

ஹாசன்

============

* பதிலடி கிடைக்கும்!

மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று, அதிகார ஆசையில் வாக்குறுதிகளை கூறி, மக்களுக்கு ஆசை காட்டி காங்கிரஸ் வெற்றி பெற்றது. இப்போது வாக்குறுதிகளை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்றால், காங்கிரசை அதிக தொகுதிகளில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று, மக்களை மிரட்டுகின்றனர். இது தான் காங்கிரசின் சுயரூபம். மிரட்டி ஓட்டு வாங்க வேண்டும் என்று நினைத்தால், மக்கள் ஆதரிக்க மாட்டார்கள். காங்கிரஸ் மிரட்டலுக்கு லோக்சபா தேர்தலில் தக்க பதிலடி கிடைக்கும்.

- சுரேஷ் நாராயணா குட்டி

பொதுச்செயலர், கோலார் மாவட்ட பா.ஜ.,

தங்கவயல்.

===============

* சாபம் விடாது!

சட்டியில் இருப்பது தான் அகப்பையில் வரும் என்பது, எல்லாருக்கும் தெரிந்த கதை தான். வாக்குறுதி திட்டங்களை நிறைவேற்ற அரசிடம் பணம் இல்லை. இதனால் எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணா மூலம், வாக்குறுதி திட்டங்கள் நிறுத்தப்படும் என்று, கர்நாடகா அரசு சொல்லி உள்ளது. மக்களை மிரட்டும் காங்கிரசின் தந்திரம் பலிக்காது. மக்களின் சாபத்தை சம்பாதித்து கொண்டு இருக்கின்றனர். மக்கள் சாபம் சும்மா விடாது. இந்த மிரட்டல், உருட்டலுக்கு எல்லாம் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ், பெரிய விலை கொடுக்க போகிறது.

-கமல்நாதன்

தலைவர், நகர பா.ஜ.,

தங்கவயல்.

==============

* மதிப்பை கெடுக்கும்!

அன்பால் தான் எதையும் சாதிக்க வேண்டுமே தவிர, அதிகாரத்தால் இல்லை. அன்னபாக்யா திட்டத்தின் கீழ் ரேஷன் அரிசி, முழுமையாக கிடைக்கவில்லை. ஆனாலும் பெண்களுக்கு மாதம் 2,000 ரூபாய், இலவச பஸ் பயண திட்டம் வரவேற்கத்தக்கது. இதனால் ஏழை பெண்கள் பயன் அடைந்து உள்ளனர். ஏழைகளின் நலனை பாதிக்கும் வகையில், திட்டத்தை நிறுத்துவதாக சொல்வது அரசு மதிப்பை கெடுக்கும். அரசு நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. இதனால் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் சிக்கி தவிக்கின்றனர்.

- ரஞ்சித்,

கார்மென்ட்ஸ் தொழிலாளர் நல சங்கம்,

பங்கார் பேட்டை.

==============

* இரட்டை நாக்கு!

லோக்சபா தேர்தல் நடக்க உள்ள நிலையில், ஆளும் காங்கிரஸ் அரசிடம் இருந்து, புதிய சலுகை கிடைக்கும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால், அந்த எதிர்பார்ப்பை பொய்யாக்கும் வகையில், ஏற்கனவே அமலில் உள்ள, ஐந்து வாக்குறுதி திட்டங்களை நிறுத்த போவதாக சொல்வது, எந்தவிதத்திலும் நியாயம் இல்லை. தேர்தலுக்கு முன்பு ஒரு பேச்சு, வெற்றி பெற்ற பின்னர் இன்னொரு பேச்சா. அன்பான மக்களை அதிகார துஷ்பிரேயோகம் செய்து, மிரட்டி பணிய வைத்து ஒருபோதும் ஓட்டு வாங்க முடியாது.

- ரங்கசாமி

செயலர், அ.தி.மு.க.,

பங்கார்பேட்டை தொகுதி

- நமது நிருபர் குழு -






      Dinamalar
      Follow us