ராஜஸ்தானில் நாசவேலை; ரயிலைக் கவிழ்க்க முயற்சி; உஷார் ஊழியர்களால் விபத்து தவிர்ப்பு!
ராஜஸ்தானில் நாசவேலை; ரயிலைக் கவிழ்க்க முயற்சி; உஷார் ஊழியர்களால் விபத்து தவிர்ப்பு!
ADDED : செப் 19, 2024 09:40 PM

பிலாஸ்பூர்: ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீர் மாவட்டத்தில், சரக்கு ரயில் கவிழ்க்கும் முயற்சி கண்டுபிடிக்கப்பட்டு முறியடிக்கப்பட்டது. லோகோ பைலட், உஷாராக செயல்பட்டதால் விபத்து தவிர்க்கப்பட்டது.
பிலாஸ்பூர் சாலைக்கும் ருத்ராபூர் நகருக்கும் இடையே உள்ள ரயில் தண்டவாளத்தில் தான் இச்சம்பவம் நடந்தது. சம்பவம் தொடர்பாக ரயில்வே சட்டம் 1989ன் பிரிவுகளின் கீழ் ராம்பூர் ஜிஆர்பி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இது குறித்து இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
செப்டம்பர் 18 அன்று 22.18 மணி அளவில், ரயில் எண் 12091ன் லோகோ பைலட், பிலாஸ்பூர் சாலைக்கும் ருத்ராபூர் நகருக்கும் இடையே கிமீ 43/10-11 இல் சென்றபோது தண்டவாளத்தில் 6 மீட்டர் நீளமுள்ள இரும்புக் கம்பம் ஒன்று இருப்பதைக் கண்டார். உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டது. ருத்ராபூர் நகரின் ஸ்டேஷன் மாஸ்டருக்குத் தெரிவித்தார். இரும்புக் கம்பம் அகற்றப்பட்டு பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட பிறகு ரயில் இயக்கப்பட்டது.இவ்வாறு ரயில்வே தெரிவித்துள்ளது.
மேலும், இது நாசவேலையாக இருக்கலாம் என்றும் ரயில்வே தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

