ADDED : மார் 09, 2024 11:06 PM

பெங்களூரு: அதிகரித்து வரும் மனித - விலங்குகள் மோதலை தடுக்கும் வகையில், தென் மாநிலங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் இன்று பண்டிப்பூர் சரணாலயத்தில் நடக்கிறது.
இதுதொடர்பாக, வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரோ நேற்று அளித்த பேட்டி:
கடந்த மாதம் வயநாடு பகுதியில் ஆண் யானை இறந்து கிடந்தது. அந்த யானையின் பற்கள் பிடுங்கப்பட்டிருந்தன.
இதுதொடர்பாக தென் மாநிலங்கள் வனத்துறை அமைச்சர்ககள் கூட்டம் நடத்தப்படும் என கூறியிருந்தேன்.
அதன்படி, மனித - விலங்குகள் மோதலை தடுக்கும் வகையில், தென் மாநிலங்களின் வனத்துறை அமைச்சர்களின் கூட்டம் பண்டிப்பூர் புலிகள் காப்பகத்தில் இன்று நடக்கிறது. கர்நாடகா, தமிழகம், கேரள மாநிலத்தின் உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
கர்நாடக வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே, கேரளா அமைச்சர் சுசீந்திரன், கேரளாவின் கூடுதல் தலைமை செயலர் ஜோதிலால், தமிழகத்திலிருந்து உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

