கொரோனா தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 4,394 ஆக உயர்வு
கொரோனா தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 4,394 ஆக உயர்வு
ADDED : ஜன 02, 2024 07:02 AM

புதுடில்லி : நாடு முழுதும் நேற்று ௬௩௬ பேர் பாதிக்கப்பட்டதை அடுத்து, இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, ௪,௩௯௪ ஆக உயர்ந்துள்ளது. இவர்களில், ௧௯௬ பேர் உருமாறிய ஜே.என்.௧ வைரஸ் தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கை: நேற்று காலை 8:00 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், நாடு முழுதும் புதிதாக, 636 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால், மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, 4,394 ஆக உயர்ந்துள்ளது.
அதே நேரத்தில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் மூன்று பேர், நேற்று காலையுடன் முடிவடைந்த ௨௪ மணி நேரத்தில் இறந்துள்ளனர். அவர்களில் இருவர் கேரளாவையும், மற்றொருவர் தமிழகத்தையும் சேர்ந்தவர்.
நாடு முழுதும் கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்களில், ௧௯௬ பேர், உருமாறிய வைரசான ஜே.என்.1 தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இதுவரை 10 மாநிலங்களில், ஜே.என்.1 தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.
அவற்றில் கேரளா 83, கோவா 51, குஜராத் 34, என்ற ரீதியில், மூன்று மாநிலங்களில் தான் பாதிப்பு அதிகம் உள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

