தமிழகத்துக்கு ரூ.7,268 கோடி வரி பகிர்வை வழங்கியது மத்திய அரசு தமிழகத்துக்கு ரூ.7,268 கோடி
தமிழகத்துக்கு ரூ.7,268 கோடி வரி பகிர்வை வழங்கியது மத்திய அரசு தமிழகத்துக்கு ரூ.7,268 கோடி
ADDED : அக் 11, 2024 03:07 AM

புதுடில்லி சமூக மற்றும் உட்கட்டமைப்பு திட்டங்களை மேம்படுத்தும் நோக்கில், மாநிலங்களுக்கான வரி பகிர்வாக 1.78 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு நேற்று வெளியிட்டது.
அதிகபட்சமாக, உத்தர பிரதேசத்துக்கு 31,962 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஜி.எஸ்.டி., உள்ளிட்ட வரிகளின் அடிப்படையில் வசூலாகும் தொகையை மொத்தமாக வசூலிக்கும் மத்திய அரசு, அதில் மாநிலங்களுக்கான வரிப்பகிர்வை வழங்கிவருகிறது.
நிதிக் கடமை
வரவிருக்கும் பண்டிகை காலத்தில், மாநிலங்களின் மூலதனச் செலவினங்களை அதிகரிக்கவும், வளர்ச்சி மற்றும் நலன் சார்ந்த நிதிக் கடமைகளை நிறைவேற்றவும் வரிப்பகிர்வு தொகையாக, 1.78 லட்சம் கோடி ரூபாயை மத்திய நிதியமைச்சகம் நேற்று வெளியிட்டுஉள்ளது.
இதில் அதிகபட்சமாக, உத்தர பிரதேசத்துக்கு 31,962 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.
அடுத்தாக பீஹாருக்கு 17,921 கோடி ரூபாயும், மூன்றாவதாக மத்திய பிரதேசத்துக்கு 13,987 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்துக்கு 7,268 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. கேரளாவுக்கு 3,430 கோடி; ஆந்திராவுக்கு 7,211 கோடி; தெலுங்கானாவுக்கு 3,745 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுஉள்ளது.
கூடுதல் தவணை
குறைந்தபட்சமாக, கோவாவுக்கு 688 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த மாதம் வழங்கக்கூடிய தவணையுடன் கூடுதல் தவணையாக, 89,086.50 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

