சுமலதாவா... ம.ஜ.த.,வா? பா.ஜ.,வினருடன் அமித் ஷா பேசியது என்ன?
சுமலதாவா... ம.ஜ.த.,வா? பா.ஜ.,வினருடன் அமித் ஷா பேசியது என்ன?
ADDED : பிப் 14, 2024 04:49 AM
மைசூரு வந்திருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, லோக்சபா தேர்தல் தொடர்பாக மாண்டியா மாவட்ட பா.ஜ.,வினருடன் மிக முக்கிய விஷயங்கள் குறித்து விவாதித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
மைசூரில் சுத்துார் மடம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வந்திருந்தார். அதைத் தொடர்ந்து, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி அறிவுரை வழங்கினார். பழைய மைசூரு பகுதியில் பா.ஜ.,வை பலப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில், மாண்டியாவின் கே.ஆர்., பேட் முன்னாள் எம்.எல்.ஏ., நாராயண கவுடா பங்கேற்றது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. சட்டசபைத் தேர்தலில் தோல்வியடைந்த அவர், கட்சித் தலைவர்கள் மீது அதிருப்தியில் இருந்தார். சமீபத்தில் முதல்வர் சித்தராமையாவை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
அறிவுரைகள்
l கூட்டணி தர்மத்தை பின்பற்ற வேண்டும். கூட்டணி தொடர்பாக கட்சித் தலைவர்கள் முடிவெடுத்துள்ளனர். இரு கட்சிகளுக்கும் சமமான மரியாதை கிடைக்க வேண்டும். கூட்டணிக்கு எதிராக யாரும் மேடைகளில் பேச வேண்டாம். தேர்தலில் இரு கட்சித் தொண்டர்களும் இணைந்து செயல்படுவது
l மாண்டியா தொகுதி யாருக்கு வழங்க வேண்டும் என்பதை நாங்கள் தீர்மானிப்போம். கூட்டணி வேட்பாளர் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற உழைப்பது
l தொகுதி ஒதுக்கீடு குறித்து உரிய நேரத்தில் முடிவு செய்யப்படும். மாண்டியாவில் பா.ஜ., போட்டியிட்டால் ஏற்படும் நன்மைகள்
l ஒருவேளை மாண்டியாவில் குமாரசாமி போட்டியிட்டால், 'பிளஸ், மைனஸ்', இதனால் பா.ஜ.,வுக்கு என்ன லாபம் குறித்து விவாதிக்கப்பட்டது.
கடந்த லோக்சபா தேர்தல் காட்சிகள் மாறி உள்ளன. பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி அமைத்துள்ளன.
இதனால், மாண்டியா தொகுதி ம.ஜ.த.,வுக்கா அல்லது சுமலதாவுக்கா என்பது வரும் 20ம் தேதி புதுடில்லியில் நடைபெறும் தொகுதி பங்கீடு தொடர்பான முக்கிய கூட்டத்துக்கு பின்னரே தெரிய வரும்.
- நமது நிருபர் -

