செபி தலைவர் மீது நேரம் வரும் போது நடவடிக்கை: மீண்டும் எச்சரிக்கிறார் ராகுல்
செபி தலைவர் மீது நேரம் வரும் போது நடவடிக்கை: மீண்டும் எச்சரிக்கிறார் ராகுல்
ADDED : அக் 29, 2024 07:56 AM

புதுடில்லி: செபி தலைவர் மாதவி புரி பூஜ் மீது நேரம் வரும்போது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.,யுமான ராகுல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக வலைத்தளத்தில் ராகுல் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: செபி தலைவர் மாதவி புரி பூஜ் என்ன காரணத்திற்காக ஐ.சி.ஐ.சி.ஐ.,யிடம் இருந்து பணம் பெற்றார்? செபி அமைப்பு தலைவராக இருக்கும் போது அவர் பட்டியலிடப்படாத நிறுவனங்களில் எப்படி பங்குகளை வைத்திருக்க முடியும்? ஸ்டார்ட்அப் இந்தியா நிறுவனத்திடம் இருந்து அந்த நிறுவனம் பல கோடி ரூபாய் பெற்றது ஏன்?
என்ன பயத்தால் அரசு இதற்கு நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது? மாதவி புரி பூஜ் அதானியின் பணத்தையும், மதிப்பையும், நற்பெயரையும் பாதுகாக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது.
ஆனால், செபி தலைவரை யார், ஏன் பாதுகாக்கிறார்கள்? இது குறித்து விசாரணை அமைப்புகள் விசாரிக்கவில்லை. ஊடகங்கள் கேள்வி கேட்கவில்லை. அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. நாங்கள் விசாரித்தோம். கேள்வியும் கேட்கிறோம். நேரம் வரும்போது நடவடிக்கையும் எடுக்கப்படும். இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.
முன்னதாக...!
ஏற்கனவே, செபி தலைவர் பார்லி குழு முன் விசாரணைக்கு ஆஜராக ஏன் தயங்குகிறார்? செபி தலைவரை பாதுகாக்கும் பின்னணியில் இருப்பது யார்? என ராகுல் கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

