ADDED : அக் 24, 2024 12:59 AM
பாரபங்கி, எச்சிலை தடவி சப்பாத்தி தயாரித்த ஹோட்டல் ஊழியர் கைது செய்யப்பட்டார்.
உத்தர பிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டம் சுதியமாவ் நகரில் உள்ள ஒரு ஹோட்டலில் பணியாற்றும் இர்ஷாத் என்ற ஊழியர், எச்சிலை தடவி சப்பாத்தி தயாரித்தார்.
இந்தக் காட்சியை மொபைல் போனில் 'வீடியோ' எடுத்த சக ஊழியர் சமூக வலைதளத்தில் பதிவிட்டார். அது வேகமாக பரவியது.
தகவல் அறிந்த ராம்நகர் போலீசார், சம்பந்தப்பட்ட ஹோட்டலுக்கு சென்று இர்ஷாத்தை கைது செய்தனர். மேலும், அந்த ஹோட்டலுக்கு 'சீல்' வைக்கப்பட்டது.
ஹோட்டலில் இருந்த அனைத்து சப்பாத்திகளும் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
உத்தர பிரதேசத்தின் சஹரன்பூர் மற்றும் பாக்பத் ஆகிய மாவட்டங்களிலும் சமீபத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்தன.
இதுபோன்ற செயல்களுக்கு ஜாமினில் வர முடியாத, கடும் தண்டனை அளிக்கும் சட்டத்தை இயற்ற உ.பி., அரசு ஆலோசித்து வருகிறது.

