உலகிற்கு அமைதியை கொண்டு வர பாடுபடும் இந்தியா: மோகன் பகவத்
உலகிற்கு அமைதியை கொண்டு வர பாடுபடும் இந்தியா: மோகன் பகவத்
ADDED : ஆக 15, 2025 03:43 PM

புவனேஸ்வர்: '' உலகிற்கு அமைதி மற்றும் மகிழ்ச்சியை கொண்டு வரவும், தர்மத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் இந்தியா பாடுபடுகிறது,'' என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: இந்தியா தனித்துவமிக்க நாடு. உலகிற்கு அமைதி மற்றும் மகிழ்ச்சியை கொண்டு வரவும், தர்மத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் பாடுபடுகிறது. நம் நாட்டில் உள்ள அனைவரும் மகிழ்ச்சி. தைரியம், பாதுகாப்பு, அமைதி மற்றும் மரியாதை கிடைக்கச் செய்வதற்கே நாம் சுதந்திரம் பெற்றோம். இன்று உலகம் தடுமாறி வருகிறது. கடந்த 2000 ஆண்டுகளில் பல சோதனைகள் இருந்த போதும், பிரச்னைகளுக்கு இன்னும் தீர்வு கண்டுபிடிக்கப்படவில்லை.
உலகிற்கு ஒரு தீர்வை வழங்குவதும், மதக் கொள்கை அடப்படையில் வேரூன்றிய நமது தொலைநோக்கு பார்வையின் அடிப்படையில் மகிழ்ச்சி மற்றும் அமைதியால் நிரப்பப்பட்ட ஒரு புதிய உலகத்தை உருவாக்குவதும் நமது கடமை. இவ்வாறு மோகன் பகவத் பேசினார்.