ADDED : பிப் 20, 2024 06:54 AM
பெங்களூரு: உடல் நிலை பாதிப்பால், முதல்வர் சித்தராமையா ஓய்வெடுத்து வருகிறார்.
கர்நாடக முதல்வர் சித்தராமையா, இம்மாதம் 16ம் தேதி, 2024 - 25ம் ஆண்டிற்கான மாநில பட்ஜெட்டை, சட்டசபையில் தாக்கல் செய்தார். மறுநாள் 17ம் தேதி, மங்களூரில் நடந்த காங்கிரஸ் தொண்டர்கள் மாநாட்டில் பங்கேற்றார்.
அதற்கடுத்த நாள் 18ம் தேதி, மாண்டியா, ஹாவேரியில் நடந்த அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று, இரவே பெங்களூரு திரும்பினார். அப்போது சற்று சோர்வாக காணப்பட்டார்.
இதற்கிடையில், தொண்டை வலியால் அவதிப்பட்டார். நேற்று காலை நடந்த ஒரு அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்காமல், முதல்வரின் அரசு பங்களா காவேரி இல்லத்துக்குச் சென்றார்.
அங்கு மருந்து சாப்பிட்டுவிட்டு, மாலை வரை ஓய்வு எடுத்தார். பின், மாலையில் நடந்த சத்ரபதி சிவாஜி ஜெயந்தி விழாவில் பங்கேற்றார். அதன் பின், மீண்டும் ஓய்வு எடுத்தார்.

