ADDED : நவ 19, 2024 11:58 PM
மைசூரு; ''குமாரசாமியை நடிகை ராதிகா, கரியன் என அழைத்தால் தவறில்லை. அமைச்சர் ஜமீர் அகமதுகான் அழைத்தால் தவறா,'' என காங்கிரஸ் தலைவி தேஜஸ்வினி கவுடா தெரிவித்தார்.
மைசூரு காங்கிரஸ் அலுவலகத்தில், நேற்று அவர் அளித்த பேட்டி:
நடிகை ராதிகாவிடம், ஊடகத்தினர் 'குமாரசாமி உங்களை எப்படி அழைப்பார், நீங்கள் அவரை எப்படி அழைப்பார்' என, கேள்வி எழுப்பி இருந்தனர். அதற்கு பதிலளித்த ராதிகா, 'என்னை குமாரசாமி சின்னு என, அழைப்பார். அவரை நான் கரியா என, அழைப்பேன்' என பதில் அளித்திருந்தார்.
ராதிகா, கரியன் என அழைத்தால் தவறில்லை. ஆனால் அமைச்சர் ஜமீர் அகமது அழைத்தால் தவறா. இது என்ன நியாயம். அனைவருக்கும் சமமான கல்வி, சலுகைகள், இட ஒதுக்கீடு இருக்க வேண்டும். சூரிய மண்டலத்தில் கால் வைக்கும் இந்த காலத்திலும், கருப்பன், வெள்ளையன் என்ற பாரபட்சம் உள்ளது. தீண்டாமை என்பது இன்னும் இருப்பது வெட்கக்கேடு.
இவ்வாறு அவர் கூறினார்.

