போலீசுக்கு பயந்து குளத்தில் குதித்த பலாத்கார குற்றவாளி மரணம்
போலீசுக்கு பயந்து குளத்தில் குதித்த பலாத்கார குற்றவாளி மரணம்
ADDED : ஆக 24, 2024 11:51 AM

கவுகாத்தி: அசாமில் 14 வயது சிறுமியை பலாத்காரம் செய்தவர், போலீசிடம் இருந்து தப்பிக்க குளத்தில் விழுந்து மரணமடைந்தார்.
அசாமின் நகோவான் பகுதியில் டியூசன் சென்று விட்டு சைக்களில் திரும்பிய 14 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டார். அந்த பகுதியில் இருந்த குளம் அருகே மயக்க நிலையில் கிடந்த சிறுமியை உள்ளூர் மக்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தன்னை 3 பேர் கூட்டு பலாத்காரம் செய்ததாக போலீசில் அந்த சிறுமி வாக்குமூலம் அளித்தார். இச்சம்பவத்தை கண்டித்தும், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது வன்முறையாக மாறியது.
இச்சம்பவம் தொடர்பாக தபாசுல் இஸ்லாம் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்தனர். நேற்று( ஆக.,23) இரவு தபாசுல் இஸ்லாமை, சம்பவம் நிகழ்ந்த குளத்திற்கு போலீசார் அழைத்து சென்றனர். அப்போது அவர், தப்பியோட நினைத்து குளத்திற்குள் குதித்தார். உடனடியாக போலீசார் நீச்சல் வீரர்களை அழைத்து அவரை தேடினர். தீவிர தேடுதலுக்கு பிறகு இன்று அதிகாலை 3 மணியளவில் தபாசுல் இஸ்லாம் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார்.

