பயங்கரவாதத்தை பிரதமர் மோடி ஒழித்துவிட்டார்: அமித்ஷா பெருமிதம்
பயங்கரவாதத்தை பிரதமர் மோடி ஒழித்துவிட்டார்: அமித்ஷா பெருமிதம்
UPDATED : ஏப் 22, 2024 01:51 PM
ADDED : ஏப் 22, 2024 01:43 PM

ராய்ப்பூர்: நாட்டில் இருந்து பயங்கரவாதத்தை பிரதமர் மோடி ஒழித்துவிட்டார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலம் கான்கேர் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது: சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது, ஐந்து ஆண்டுகளாக நக்சல்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நாட்டில் இருந்து பயங்கரவாதத்தை பிரதமர் மோடி ஒழித்துவிட்டார். அனைவருடைய சொத்துக்களும் கணக்கெடுக்கப்படும் என்று பிரதமர் மோடி தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பதால் காங்கிரஸ் கட்சிக்கு எரிச்சல் ஏற்பட்டுள்ளது.
நக்சலைட் தாக்குதல்
விரைவில் நக்சலைட் தாக்குதல்கள் முடிவுக்கு வரும். ஓட்டு வங்கிக்காக அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் காங்கிரசார் பங்கேற்கவில்லை. கடந்த 10 ஆண்டுகளில், நாட்டில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த பிரதமர் மோடி உழைத்துள்ளார். சத்தீஸ்கர் மக்கள் நலனுக்கு காங்கிரஸ் அரசு என்ன செய்தது. இதை ராகுலிடம் நான் கேட்க விரும்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

