வாரணாசி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் பிரதமர் மோடி
வாரணாசி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் பிரதமர் மோடி
UPDATED : மே 14, 2024 01:22 PM
ADDED : மே 14, 2024 12:19 PM

வாரணாசி: உத்தர பிரதேசம் மாநிலம் வாரணாசி லோக்சபா தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடி, இன்று (மே 14) தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
உத்தர பிரதேசம் மாநிலம் வாரணாசி லோக்சபா தொகுதியில் 3வது முறையாக போட்டியிடுகிறார் பிரதமர் மோடி. ஜூன் 1ம் தேதி, 7வது மற்றும் கடைசி கட்ட தேர்தலின்போது இந்த தொகுதிக்கான ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே (மே 14) கடைசி நாள் என்பதால், இன்று பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல் செய்ய வாரணாசி வந்தார். முன்னதாக அவர் கங்கை ஆற்றங்கரையில் சிறப்பு வழிபாடு நடத்தினார்.


