ADDED : ஏப் 25, 2025 02:25 PM

புதுடில்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில், ''பாகிஸ்தான் அரசும், இந்திய அரசும் அதிகபட்ச நிதானத்தைக் கடைபிடிக்க வேண்டும்'' என ஐ.நா., வேண்டுகோள் விடுத்துள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து, ஐ.நா., பொதுச்செயலாளரின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் கூறியிருப்பதாவது: பாகிஸ்தான் அரசும், இந்திய அரசும் அதிகபட்ச நிதானத்தைக் கடைபிடிக்க வேண்டும். ஐ.நா., பொதுச்செயலாளர் நிலைமையை மிகவும் உன்னிப்பாகவும் மிகுந்த கவலையுடனும் கண்காணித்து வருகிறார்.
நிலைமை மேலும் மோசமடையாமல் பார்த்துக் கொள்ள பாகிஸ்தான், இந்திய அரசுகளை கேட்டுக் கொள்கிறோம். எந்தவொரு பிரச்னையும், பரஸ்பர ஈடுபாட்டின் மூலம் அமைதியாக தீர்க்கப்பட முடியும் என நம்புகிறோம். பாகிஸ்தான் அரசும், இந்திய அரசும் அதிகபட்ச நிதானத்தைக் கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இதனால் இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இதனால் நிதானத்தைக் கடைபிடிக்க வேண்டும் என ஐ.நா., வேண்டுகோள் விடுத்துள்ளது.

