9வது நாளை எட்டிய ஆப்பரேஷன் அகல்; பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூட்டில் ராணுவ வீரர்கள் 2 பேர் வீர மரணம்
9வது நாளை எட்டிய ஆப்பரேஷன் அகல்; பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூட்டில் ராணுவ வீரர்கள் 2 பேர் வீர மரணம்
UPDATED : ஆக 09, 2025 09:25 AM
ADDED : ஆக 09, 2025 09:15 AM

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டையில், ராணுவ வீரர்கள் இரண்டு பேர் வீர மரணம் அடைந்தனர்.
ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள அகல் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறை தகவல் கிடைத்தது. அப்பகுதியில் போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த ராணுவ நடவடிக்கைக்கு ஆப்பரேஷன் அகல் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் 9வது நாளான இன்று பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டையில், ராணுவ வீரர்கள் இரண்டு பேர் வீர மரணம் அடைந்தனர்.
தற்போது நடந்து வரும் ராணுவ நடவடிக்கையில், இதுவரை எட்டுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து அப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினர் சந்தேகப்படுகின்றனர்.
இதனால், அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.