ADDED : மார் 08, 2026 02:01 AM
ஸ்ரீநகர்: ஈரானுக்கு எதிராக இஸ்ரேல், அமெரிக்கா நடத்தி வரும் போரில், ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதை கண்டித்து, ஜம்முவின் ஸ்ரீநகர் உட்பட பல்வேறு இடங்களில் ஷியா முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பல இடங்களில் பாதுகாப்பு படையினர் மற்றும் போராட்டக்காரர்கள் இடையே மோதல்கள் வெடித்தன. இதையடுத்து, காஷ்மீரில் இணையதள சேவைகள் துண்டிக்கப்பட்டன. இந்நிலையில், தடை உத்தரவு விலக்கப்பட்டு, இணையதள சேவைகள் நேற்று முன்தினம் முதல் செயல்பட துவங்கின.
லால் சவுக் உட்பட பல்வேறு பகுதிகளில் கடைகள், வணிக நிறவனங்கள், ஒரு வாரத்துக்கு பின் நேற்று மீண்டும் திறக்கப்பட்டன. பொது மற்றும் தனியார் போக்குவரத்து வழக்கம் போல் இயங்கியதை அடுத்து, மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பியது.
மூடப்பட்டிருந்த கல்வி நிலையங்கள் நாளை திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
