எத்தனை முனை போட்டி வந்தாலும் தமிழகத்தில் தேஜ கூட்டணி ஆட்சி: நயினார் நாகேந்திரன் உறுதி
எத்தனை முனை போட்டி வந்தாலும் தமிழகத்தில் தேஜ கூட்டணி ஆட்சி: நயினார் நாகேந்திரன் உறுதி
ADDED : டிச 15, 2025 06:22 PM

புதுடில்லி: '' தமிழகத்தில் மூன்று முனை அல்லது நான்கு முனை போட்டி வந்தாலும் தமிழகத்தில் தேஜ கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதி,'' என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
டில்லியில் பாஜ செயல் தலைவர் நிதின் நபினை சந்தித்த பிறகு தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது: அமித்ஷா உடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது. தமிழகத்தில் எனது யாத்திரை ஜனவரி 9 ல் நிறைவு பெறுகிறது. இதில் கலந்து கொள்ள வே ண்டும் என பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷாவை அழைத்துள்ளேன் . இருவரில் ஒருவர் வருவார்கள். அமித்ஷாவிடம் உத்தேச தொகுதி பட்டியல் எதுவும் வழங்கவில்லை. உத்தேச பட்டியல் என்பதே பொய்யான விஷயம்.
தேர்தலுக்கு இன்னும் 3 மாதம் உள்ளது. பல்வேறு மாற்றங்கள் வரும். அதிமுக பாஜ கூட்டணி உறுதி. இன்னும் பல கட்சிகள் கூட்டணிக்கு வரும். இதுவரை எந்த கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடக்கவில்லை.
தமிழகத்தை முன்னர் இரு முனை போட்டி நடந்துள்ளது. சுயேச்சைகள் போட்டியிட்டுள்ளனர். சுயேச்சைகளும் புதிதாக கட்சி ஆரம்பித்த உடன் வெற்றி பெற்றதாக வரலாறு இல்லை. மூன்று முனை, நான்கு முனை போட்டி வந்தாலும் தமிழகத்தில் தேஜ கூட்டணி நிச்சயம் ஆட்சி அமைக்கும். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.

