காங்கிரசுடன் எந்த சமரசமும் செய்து கொள்ள மாட்டோம்: பினராயி விஜயன் திட்டவட்டம்
காங்கிரசுடன் எந்த சமரசமும் செய்து கொள்ள மாட்டோம்: பினராயி விஜயன் திட்டவட்டம்
ADDED : ஏப் 25, 2024 02:13 PM

திருவனந்தபுரம்: காங்கிரசுடன் எந்த சமரசமும் செய்து கொள்ள மாட்டோம் என கேரள முதல்வர் பினராயி விஜயன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனியார் செய்தி நிறுவனத்திற்கு பினராயி விஜயன் அளித்த பேட்டி: பா.ஜ.,வை தோற்கடிப்பதற்கே முன்னுரிமை. கேரளாவில் எந்த தொகுதியிலும் பா.ஜ.,2ம் இடத்தில் கூட வராது. காங்கிரசுடன் எந்த சமரசமும் செய்து கொள்ள மாட்டோம். கடந்த தேர்தலில் வயநாடு தொகுதியில் வெற்றி பெற்ற ராகுல் மக்களுக்காக எதும் செய்யவில்லை.
மக்களின் வாழ்வாதாரம் தொடர்பான பிரச்னைகளை நாங்கள் முன்னிலைப்படுத்தி வருகிறோம். கேரளாவின் வளர்ச்சியைப் பற்றி நாங்கள் தொடர்ந்து பேசி வருகிறோம். கேரளாவின் முன்னேற்றத்தைத் தடுக்க முயன்றவர்களை அம்பலப்படுத்துகிறோம்.
ஜனநாயக நாடு
இந்தியா ஒரு ஜனநாயக நாடு. தேசிய ஜனநாயக கூட்டணி முழு தோல்வியை சந்திக்கும்.
லோக்சபா தேர்தல்கள் எப்போதும் மத்திய அரசின் செயல்பாடுகளை மதிப்பிடுவதாகும். மத்திய அரசின் தற்போதைய ஆட்சியை ஒரு துளி கூட ஏற்காமல் இருப்பதை கேரள மக்கள் உறுதி செய்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

