ADDED : ஏப் 12, 2025 12:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்ரம்நகர்:சிவில் லைன்ஸ் மற்றும் சிக்னேச்சர் பாலம் இடையே போக்குவரத்து நெரிசலைக் குறைக்க வடக்கு டில்லியில் 183 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய மேம்பாலம் கட்டுவதற்கு மாநில பொதுப்பணித்துறை திட்டமிட்டுள்ளது.
திட்டத்தின்படி, சிவில் லைன்ஸ் தீ விபத்து சிகிச்சை மையம் மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அலுவலகம் அருகே தொடங்கி 680 மீட்டர் நீளமுள்ள ஆறு வழிச்சாலைக்கான மேம்பாலத்தை பொதுப்பணித் துறை கட்டும்.
மேம்பாலம் கட்டும்போது பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறுகளை கருத்தில் கொண்டு மாற்று ஏற்பாடுகள் குறித்து அரசு ஆலோசித்து வருகிறது.
எனினும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கட்டுமானப்பணிகளை நிறைவு செய்ய பொதுப்பணித்துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

