தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/இந்தியா/ தேசியம் பேட்டி1

தேசியம் பேட்டி1

தேசியம் பேட்டி1


ADDED : செப் 24, 2024 01:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 24, 2024 01:35 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குடும்பத்தில் ஒருவர்!

அஜித் பவாரும், நானும் ஒரே குடும்பம். அதே நேரத்தில், அவர் வேறு கட்சியின் தலைவர். அவரது கட்சி எடுக்கும் முடிவுகளுக்கு என்னிடம் கருத்து கேட்காதீர்கள். எங்கள் கூட்டணியில் முதல்வர் வேட்பாளரை அறிவிக்க இப்போது எந்த அவரசமும் எழவில்லை.

சரத் பவார்

தலைவர், தேசியவாத

காங்கிரஸ் சரத் பவார் அணி

தலித்துக்கு எதிரான கட்சி!

காங்கிரஸ் தலித்துகளுக்கு எதிரான கட்சி. அசோக் தன்வார், குமாரி செல்ஜா போன்ற தலித் தலைவர்களை காங்கிரஸ் அவமதித்துஉள்ளது. ராகுல் அமெரிக்காவுக்குச் சென்றபோது, 'நாடு வளர்ச்ச்சி அடைந்த பின் இடஒதுக்கீடு தேவைஇல்லை' என பேசியதை நினைவுப்படுத்தி பார்க்க வேண்டும்.

அமித் ஷா

மத்திய அமைச்சர், பா.ஜ.,

வாழ்நாள் இலக்கு!

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் வரை நாங்கள் ஓயமாட்டோம். இது எனக்கு அரசியல் பிரச்னையில்லை; என் வாழ்நாள் இலக்கு. ஜாதிவாரி கணக்கெடுப்பு என்ற வார்த்தையை சொல்வதற்கே பிரதமர் மோடி அஞ்சுகிறார். எஸ்.சி., - எஸ்.டி., ஓ.பி.சி.,யினர் தங்கள் உரிமைகளை பெறுவதை அவர் விரும்பவில்லை.

ராகுல்

லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர், காங்கிரஸ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us