
விதிகளை மீறவில்லை!
வக்பு சட்ட மசோதா தொடர்பான பார்லிமென்ட் கூட்டு குழுவின் விதிகளை மீறியதாக எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். கூட்டுக் குழுவில் நடந்த விவாதங்கள் குறித்து நான் எந்த தகவலையும் வெளிப்படுத்தவில்லை. விவாதத்தின் போது நடந்த வன்முறை குறித்தே பேசினேன்.
ஜகதாம்பிகா பால்
பார்லி., நிலைக்குழு தலைவர், பா.ஜ.,
பழைய நிலை வருமா?
இந்தியா - சீனா இடையே கிழக்கு லடாக் எல்லையில், இருநாட்டு ராணுவம் ரோந்து பணி மேற்கொள்ள ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. பின்னடைவை சந்தித்த நாட்டின் மோசமான வெளியுறவுக் கொள்கை தீர்வை நோக்கி திரும்புகிறது. அங்கு 2020க்கு முந்தைய நிலை மீட்டெடுக்கப்படும் என நம்புகிறோம்.
ஜெய்ராம் ரமேஷ்
பொதுச்செயலர், காங்கிரஸ்
வாரிசுகளுக்கு சீட்!
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா வேட்பாளர் பட்டியல், வாரிசு அரசியலின் பிரதிபலிப்பாக உள்ளது. முதல்வர் ஹேமந்த் சோரன், அவரின் மனைவி கல்பனா, சகோதரர் பசந்த் சோரன் என அவர்களது குடும்பமே பட்டியலை ஆக்கிரமித்து உள்ளது.
ஹிமந்த பிஸ்வ சர்மா
அசாம் முதல்வர், பா.ஜ.,

