
அதிகமாக வழங்கி இருப்போம்!
ஜம்மு - காஷ்மீர் வளர்ச்சிக்காக, 90,000 கோடி ரூபாய் சிறப்பு நிதியை பிரதமர் மோடி வழங்கியுள்ளார். இது, சர்வதேச நாணய நிதியத்திடம் பாக்., கேட்ட தொகையை விட மிகப்பெரியது. நம்முடன் அந்நாடு நல்ல நட்புறவை பேணியிருந்தால், சர்வதேச நாணய நிதியம் வழங்கியதை விட அதிகமாக வழங்கியிருப்போம்.
ராஜ்நாத் சிங்
ராணுவ அமைச்சர், பா.ஜ.,
சர்வ சாதாரணமாகி விட்டது!
தேர்தலில் பொய் வாக்குறுதிகளை அளிப்பது, காங்கிரசுக்கு சர்வ சாதாரணமாகி விட்டது. ஹிமாச்சல், கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் அளித்த வாக்குறுதிகளையே அக்கட்சி இன்னும் நிறைவேற்றவில்லை. தற்போது ஹரியானா மக்களையும் காங்., ஏமாற்றி வருகிறது.
அமித் ஷா
மத்திய உள்துறை அமைச்சர்,
பா.ஜ.,
பதவி விலக வேண்டும்!
தேர்தல் பத்திரங்கள் வாயிலாக பணம் பறிக்கப்பட்டதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுஉள்ளது. இதற்கு தார்மீக பொறுப்பேற்று அவர் பதவி விலக வேண்டும். இது குறித்து நீதிமன்றத்தின் மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும்.
ஜெய்ராம் ரமேஷ்
பொதுச்செயலர், காங்.,

