ADDED : டிச 26, 2025 01:25 AM

லக்னோ: மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின், 101வது பிறந்த நாளையொட்டி, உத்தர பிரதேசத்தின் லக்னோவில் அவரது வாழ்வையும், சித்தாந்தத்தையும் பிரதிபலிக்கும் வகையி ல் அமைக்கப்பட்டுள்ள, 'ராஷ்டிர பிரேர்னா ஸ்தல்' என்றழைக்கப்படும் , தேசிய எழுச்சிதலத்தை பிரதமர் நரேந்திர மோ டி நேற்று திறந்து வைத்தார்.
உ.பி.,யின் லக்னோவில், 230 கோடி ரூபாய் செலவில், 65 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப் பட்டுள்ள இந்த இடத்தில், வாஜ்பாய் உட்பட பா.ஜ.,வின் சித்தாந்தவாதிகளான ஷியாமா பிரசாத் முகர்ஜி, தீனதயாள் உபாத்யாய் ஆகிய மூன்று பேரின், 65 அடி உயர வெண்கல சிலைகளையும் பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். இங்கு, தலைவர்களின் தலைமைப் பண்பு, தேசத்துக்கு ஆற்றிய சேவைகள் உள் ளிட்டவை அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
பொதுமக்களிடையே கலாசார உணர்வை ஏற் படுத்தி உத்வேகம் அளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இத்தலம், தேசிய நினைவுச் சின்னமாகவும், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இடமாகவும் உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய எழுச்சி தலம், தற்போதைய மற்றும் எதிர்கால தலைமுறையினருக்கு உத்வேகம் அளிக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர, 98,000 சதுர அடி பரப்பளவில் தாமரை வடிவில் அதிநவீன அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.
இதில், டிஜிட்டல் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்கள் மூலம் தேச தலைவர்களின் பங்களிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இது, பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில், கல்விசார் அனுபவத்தை வழங்குகிறது.
ஒரு குடும்ப பெருமையை
பேசியது போதும்: மோடி
தேசிய எழுச்சி தலத்தை திறந்து வைத்தப்பின் பிரதமர் மோடி பேசியதாவது: காங்கிரஸ் ஆட்சியின்போது, நாட்டிற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய தலைவர்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை. மாறாக, ஒரே குடும்பத்தின் பெருமையை பேசினர். தேசத்திற்கு சேவை செய்யும் அனைவருக்கும் எங்கள் அரசு உரிய மரியாதை அளித்து வருகிறது. டில்லியின் கடமை பாதையில் நேதாஜிக்கு சிலை அமைத்துள்ளோம். அம்பேத்கரின் பெருமைகளை ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டன் வரை எடுத்துச் சென்றுள்ளோம். நம் நாட்டின் ஒற்றுமையையும், அடையாளத்தையும் வலுப்படுத்திய அனைத்துத் தலைவர்களின் பங்களிப்புகளையும் அங்கீகரிப்பதில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். இங்கு அமைக்கப்பட்டுள்ள தேசிய எழுச்சி தலம், சுயமரியாதை, ஒற்றுமை மற்றும் சேவையின் சின்னமாக திகழ்கிறது. ஷியாமா பிரசாத் முகர்ஜி, தீனதயாள் உபாத்யாய், வாஜ்பாய் ஆகியோரின் பிரமாண்ட சிலைகள், தேசத்தை கட்டியெழுப்பும் இளைய தலைமுறையினருக்கு உத்வேகம் அளிக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

