தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/இந்தியா/பிரதமர் மோடியின் கற்பனை கணிப்பு: ராகுல் கோபம்

பிரதமர் மோடியின் கற்பனை கணிப்பு: ராகுல் கோபம்

பிரதமர் மோடியின் கற்பனை கணிப்பு: ராகுல் கோபம்


UPDATED : ஜூன் 02, 2024 01:42 PM

ADDED : ஜூன் 02, 2024 01:31 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 02, 2024 01:42 PM ADDED : ஜூன் 02, 2024 01:31 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: ‛‛நேற்று வெளியானது அனைத்தும் கருத்துக்கணிப்பு அல்ல. பிரதமர் மோடியின் கற்பனை கருத்துக்கணிப்பு '' என காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியுள்ளார்.

லோக்சபாவுக்கு ஏழு கட்டங்களாக நடந்த தேர்தல் நேற்று( ஜூன் 1) நிறைவு பெற்றது. ஓட்டு எண்ணிக்கை நாளை மறுநாள்(ஜூன் 4) வெளியாக உள்ளது. நேற்று, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டன. பல்வேறு ஊடக அமைப்புகள் வெளியிட்ட கருத்துக்கணிப்புகளிலும், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என தெரிவித்துள்ளன. ‛இண்டியா ' கூட்டணி 144 இடங்களை பிடிக்கும் என தெரிவித்து உள்ளன.

இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி., ராகுல் நிருபர்களிடம் கூறியதாவது: இது கருத்துக்கணிப்பு அல்ல. மோடி ஊடகத்தின் கணிப்பு. அவரது கற்பனை கருத்துக்கணிப்பு. ‛ இண்டியா ' கூட்டணி 295 இடங்களில் வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us