2024 மற்றும் 2029லும் மோடியே பிரதமராக தொடர்வார்: ராஜ்நாத் சிங்
2024 மற்றும் 2029லும் மோடியே பிரதமராக தொடர்வார்: ராஜ்நாத் சிங்
UPDATED : மே 17, 2024 04:17 PM
ADDED : மே 17, 2024 03:49 PM

புதுடில்லி: 2024 மட்டுமல்ல 2029 லும் நரேந்திர மோடியே பிரதமராக தொடர்வார் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
2025 செப்டம்பர் 17 க்கு பிறகு, பிரதமர் மோடிக்கு 75 வயது ஆவதால், அமித்ஷா அடுத்த பிரதமர் ஆக பதவியேற்பார் என டில்லி முதல்வர் கெஜ்ரிவால் திரும்ப, திரும்ப சொல்லி வருகிறார். இதனை அமித்ஷா மறுத்துவிட்டார். பா.ஜ.,வில் அதுபோன்ற விதிகள் ஏதும் இல்லை என தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியதாவது: 2024ல் மட்டுமல்ல 2029 லும் நரேந்திர மோடி பிரதமராக தொடர்வார். இது விவாதத்திற்கு உரிய விஷயம் அல்ல. நாட்டின் பெயரை சர்வதேச அளவில் உயர்த்தியதுடன் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தி உள்ளார்.
2027 ம் ஆண்டுக்கு பிறகு, அமெரிக்கா, சீனாவிற்கு பிறகு உலகின் 3வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

