ரஷ்ய அதிபருடன் மோடி பேச்சு; இந்தியா வருமாறு அழைப்பு
ரஷ்ய அதிபருடன் மோடி பேச்சு; இந்தியா வருமாறு அழைப்பு
ADDED : ஆக 09, 2025 05:14 AM
புதுடில்லி : ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் விவகாரத்தில் இந்தியாவுக்கு அமெரிக்கா அதிக வரி விதித்துள்ள சூழலில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொலைபேசியில் பேசினார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், இந்தாண்டு இறுதியில் நம் நாட்டுக்கு வர உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இதை, ரஷ்யா சென்றுள்ள நம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உறுதிபடுத்தினார். இந்நிலையில், அதிபர் புடினுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் நேற்று பேசினார்.
உக்ரைன் மோதல் தொடர்பான சமீபத்திய நிகழ்வுகள் குறித்து, மோடியிடம் புடின் விளக்கினார். இதற்கு நன்றி தெரிவித்த பிரதமர், இந்த பிரச்னைக்கு அமைதியான முறையில் தீர்வு காண வேண்டும் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.
இருதரப்பு உறவு குறித்து கலந்துரையாடிய தலைவர்கள், அதை இன்னும் வலுப்படுத்த உறுதிபூண்டனர். இந்தியா - ரஷ்யா இடையிலான உச்சி மாநாட்டில் பங்கேற்க டில்லி வருமாறு புடினுக்கு பிரதமர் அழைப்பு விடுத்ததாக சொ ல்லப்படுகிறது.
இது குறித்து தன் சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், 'என் நண்பர் புடினுடன் விரிவான ஆலோசனை நடத்தினேன். உக்ரைன் தொடர்பான சமீபத்திய தகவல்களை பகிர்ந்து கொண்டதற்காக அவருக்கு நன்றி தெ ரிவித்து கொள்கிறேன்.
'இருதரப்பு உறவுகள் குறித்து கருத்துகளை பரிமாறி கொண்டோம். இந்தாண்டு, இந்தியா வரும் அதிபர் புடினை வரவேற்க ஆர்வமாக உள்ளேன்' என, தெரிவித்து உள்ளார்.