தேர்தல் பரபரப்புக்கிடையே வீடியோ கேமர்களுடன் ‛‛ரிலாக்ஸ்'' செய்த மோடி
தேர்தல் பரபரப்புக்கிடையே வீடியோ கேமர்களுடன் ‛‛ரிலாக்ஸ்'' செய்த மோடி
UPDATED : ஏப் 12, 2024 01:24 AM
ADDED : ஏப் 12, 2024 01:23 AM

புதுடில்லி: தேர்தல் பிரசார பரபரப்புக்கிடையே டில்லியில் டாப் வீடியோ கேமர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடி வீடியோ கேம் விளையாடிய வீடியோ வைரலாகி வருகிறது.
பாராளுமன்ற லோக்சபாவுக்கு ஏழு கட்டங்களாக ஏப். 19ல் துவங்கி ஜூன் 01-ல் நடத்தி முடிக்க தலைமை தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. நாடுமுழுதும் தேர்தல் களம் சூடுபிடித்து வருகிறது. முதற்கட்ட தேர்தல் நடக்க உள்ள மாநிலங்களில் அனல் பறக்கும் பிரசாரங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த பரபரப்புக்கிடையே நேற்று டில்லியில் உள்ள டாப் வீடியோ கேமர்களை அவர்கள் உள்ள இடத்திற்கே திடீரென விசிட் அடித்தார் பிரதமர் மோடி. கேமர்களை சந்தித்து சிறிது கலந்துரையாடி அவர்களிடம் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
![]() |
பின்னர் கேமர்களுடன் பிரதமர் மோடி வீடியோ கேம் விளையாடி மகிழ்ந்தார். அப்போது மோடியின் விளையாடும் திறனைப் பார்த்து அங்கிருந்த கேமர்களே வியந்து கைதட்டினர்.
டிஜிட்டல் யுகத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கும் கேமர்களுடன் பிரதமர் மோடி வீடியோ கேமும் விளையாடிய இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.


