சிக்கிமின் முதல் ரயில் நிலையம்: அடிக்கல் நாட்டினார் மோடி
சிக்கிமின் முதல் ரயில் நிலையம்: அடிக்கல் நாட்டினார் மோடி
ADDED : பிப் 26, 2024 08:18 PM

காங்டாங்க்: சிக்கிம் மாநிலத்தில் முதல் ரயில் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி.
இம்மாநிலத்தில் ரயில் நிலையம் இல்லை. ரயில் போக்குவரத்து சேவையை கோரி அம்மாநில மக்கள் கடந்த 49 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்துள்ளனர்.
இந்நிலையில் ரூ. 2000 கோடி மதிப்பிலான ரயில் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு பிரதமர் மோடி இன்று வீடியோ கான்பரன்சிங் வாயிலாக துவக்கி வைத்தார். அதில் சிக்கிமின் ரங்போ என்ற இடத்தில் முதல் ரயில் நிலையத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
மேற்கு வங்கத்தின் சிவோக் மற்றும் சிக்கிமின் ராங்போ இடையே 45 கிமீ நீளமுள்ள இந்த ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது. 38 கிமீ சுரங்கப்பாதைகளையும், 2 கிமீ பாலங்களையும் கொண்டுள்ளது.முதல் ரயில் நிலையம் மூலம் சிக்கிம் மக்களின் அரை நூற்றாண்டு கனவு நிறைவேற உள்ளதாக கூறப்படுகிறது.

