ADDED : ஏப் 09, 2025 10:07 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலக்காடு; வனப்பகுதியில் தேன் சேகரிக்க சென்ற வாலிபர் ஆற்று நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், அட்டப்பாடி கருவார பகுதி.ை சேர்ந்தவர் மணிகண்டன், 24. இவர் உட்பட 9 பேர் கொண்ட குழு, கடந்த 7ம் தேதி மாலை, கரிம்பா கரிமலை வனத்தினுள் தேன் சேகரிப்பதற்காக சென்றனர். இரவு, 8:30 மணியளவில் அவர்கள், ஆற்றிலை பகுதியில்நீர்வீழ்ச்சி அருகே உள்ள பாறையில் தங்கினர்.
இதனிடையே, நீர்வீழ்ச்சியின் கீழ்பகுதியிலுள்ள ஆற்றில் இறங்கிய மணிகண்டன், ஆழமானபகுதியில் சிக்கி, நீரில் மூழ்கினார். தகவல் கிடைத்து வந்த தீயணைப்பு படையினரும், போலீசாரும் ஆற்றில் தேடியதில், நேற்று காலை மணிகண்டன் உடலை மீட்டனர். கல்லடிக்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

