30 ரூபாய் வாடகை கொடுப்பதில் சண்டை: 'சரக்கு' போடச்சென்ற நண்பர் கொலை
30 ரூபாய் வாடகை கொடுப்பதில் சண்டை: 'சரக்கு' போடச்சென்ற நண்பர் கொலை
UPDATED : ஆக 13, 2024 01:08 PM
ADDED : ஆக 13, 2024 01:02 PM

மும்பை: மும்பை அருகே மது குடிக்க ஆட்டோவில் பயணித்தபோது வாடகை பணத்தை யார் கொடுப்பது என்ற தகராறில் நண்பரை கொன்றவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனியார் நிறுவன ஊழியர்கள்
இதுகுறித்து போலீசார் கூறி உள்ளதாவது; உ.பி., மாநிலம் கோண்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சாயிப் ஜாஹித் அலி, சக்கன். இருவரும் நெருங்கிய நண்பர்கள். சொந்த ஊரில் இருந்து மும்பை வந்த அவர்கள், குர்லா பகுதியில் உள்ள ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்.ஆட்டோவில் பயணம்
சம்பவத்தன்று இருவரும் மதுகுடிக்கலாம் என்று நினைத்து அதற்காக தங்களது இருப்பிடத்தில் இருந்து ஆட்டோவில் பயணித்துள்ளனர். குர்லாவில் உள்ள மதுபான பாருக்கு அவர்கள் வந்தபோது ஆட்டோவுக்கு யார் காசு கொடுப்பது என்ற தகராறு எழுந்துள்ளது.கீழே தள்ளியதால் மரணம்
இருவரும் ஒருவருக்கு ஒருவர் சண்டையிட்டுக் கொள்ள, அப்போது சக்கனை, சாயிப் ஜாஹித் அலி கீழே பிடித்துத் தள்ளி உள்ளார். எதிர்பாராத இந்த செயலால் நிலைகுலைந்த சக்கன் கீழே விழ, அவரது தலையில் பலத்த அடி ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.கைது
உடன் வந்த நண்பனை கொன்றுவிட்டோமே என்ற அதிர்ச்சியில் உறைந்து போன சாயிப் ஜாஹித் அலி உடனடியாக அங்கிருந்து தப்பி ஓடினார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் தப்பியோடிய சாயிப் ஜாஹித் அலியை கல்யாண் ரயில்நிலையத்தில் வைத்து கைது செய்தனர்.

