ADDED : மே 17, 2024 12:01 AM

காங்கிரஸ் 40 தொகுதிகள் கூட வெல்லாது என கூறிய மம்தா, 'இண்டியா' கூட்டணி ஆட்சியமைக்க வெளியில் இருந்து ஆதரவு தருவேன் என்கிறார். அவரை நம்ப முடியாது; தேர்தலுக்குப் பின், பா.ஜ.,வுடன் சென்றாலும் செல்வார்.
ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, லோக்சபா எம்.பி., -- காங்கிரஸ்
அடையாளம் தந்த மோடி!
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கனில் இருந்து மத ரீதியான துன்புறுத்தல்களால் இந்தியா வந்து தஞ்சமடைந்த ஹிந்து, ஜெயின், சீக்கியர்கள் உள்ளிட்டோருக்கு, குடியுரிமை திருத்தச் சட்டத்தின் வாயிலாக பிரதமர் மோடி அடையாளம் தந்துள்ளார்.
அனுராக் சிங் தாக்குர், மத்திய அமைச்சர், பா.ஜ.,
இனி தான் ஆட்டமே!
பா.ஜ., 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்ற பின், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் நம் வசமாகும். காங்கிரஸ் வெல்லும் எம்.பி.,க்களின் எண்ணிக்கையை வைத்து, அவர்களால் கிரிக்கெட் போட்டி கூட நடத்த முடியாது.
ஹிமந்த பிஸ்வ சர்மா, அசாம் முதல்வர், பா.ஜ.,

