வட மாநிலங்களில் 411 இடங்களை அள்ளுகிறது : தென் மாநிலங்களில் தடம் பதிக்கிறது பா.ஜ.,
வட மாநிலங்களில் 411 இடங்களை அள்ளுகிறது : தென் மாநிலங்களில் தடம் பதிக்கிறது பா.ஜ.,
UPDATED : மார் 14, 2024 09:25 PM
ADDED : மார் 14, 2024 09:17 PM

புதுடில்லி: வரும் லோக்சபா தேர்தலில் யாருக்கு பெரும்பான்மை கிடைக்கும் என தனியார் செய்தி சேனல் நடத்ததிய ‛‛மெகா கருத்து கணிப்பு'' வெளியாகியுள்ளது. இதில் பெரும்பாலானா வட மாநிலங்களில் பா.ஜ., வெற்றி வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது.
பார்லிமென்ட் லோக்சபா தேர்தல் தேதியை விரைவில் அறிவிக்க தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. பா.ஜ., இரு கட்டங்களாக வேட்பாளர்கள்பட்டியலை வெளியிட்டுள்ளது. அதே போன்று காங்.கிரஸ் இரு கட்டங்களாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் யார் பெரும்பான்மை பெறுவர் என்பது குறித்து தனியார் செய்தி சேனல் 21 மாநிலங்களில் லட்சத்திற்கும் மேற்பட்டோரிடம் மெகா கருத்து கணிப்பு நடத்தியது.
மொத்தம் 543 தொகுதிகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில் 411 தொகுதிகளில் பா.ஜ.,105தொகுதிகளில், காங்., மற்றவை 27 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் விவரம்:
1) அசாம் : 14 (பா.ஜ., 12, பிற 02)
2) ஜார்க்கண்ட்: 14 (பா.ஜ.,12, காங்.,02)
3) சத்தீஷ்கர்: 11 (பா.ஜ., 10, காங்., 01)
4) ராஜஸ்தான்: 25( பா.ஜ., 25, காங்., 0 )
5) உத்தர்க்காண்ட்: 05 (பா.ஜ. 05)
6) மேற்குவங்கம்: 42 (திரிணமுல் காங்., 17, பா.ஜ., 25)
7) குஜராத்: 26( பா.ஜ. 26, காங், 0)
8) கர்நாடகா : 28( பா.ஜ., 25, காங்.,03 )
9) ஆந்திரா : 25 (பா.ஜ., 18, ஓய்.எஸ்.ஆர்.காங்., 07, காங்., 0)
10) தெலுங்கானா: 17 (பா.ஜ.,08, இண்டியா கூட்டணி 06, பி.ஆர்.எஸ். 02, மற்றவை 01)
11)ஒடிசா: 21 (பி.ஜ., 08, பா.ஜ. 13., காங்., 0)
12) மஹாராஷ்டிரா: 48( பா.ஜ.,41, காங்., 07) இவ்வாறு தெரிவித்து உள்ளது

