6 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது சமாஜ்வாதி
6 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது சமாஜ்வாதி
UPDATED : மார் 15, 2024 07:29 PM
ADDED : மார் 15, 2024 07:10 PM

லக்னோ: லோக்சபா தேர்தலில் சமாஜ்வாதி கட்சி 6 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டது.
வரும் லோக்சபா தேர்தலில் ‛‛இண்டியா கூட்டணி'' யில் உ.பி.யின் பிரதான எதிர்கட்சியான சமாஜ்வாதி கட்சி இடம் பெற்றுள்ளது. இக்கட்சியில் போட்டியிடும் 16 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை கடந்த ஜனவரி மாதம் கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் வெளியிட்டார்.
இதை தொடர்ந்து இன்று (மார்ச்.15) மேலும் 6 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை சமாஜ்வாதி கட்சி வெளியிட்டது. இதில் போட்டியிடும் வேட்பாளர்கள் என யஷ்வர் சிங் ( பிஜ்னோர்). மனோஜ்குமார் ( நாகினா),பானு பிரதாப் சிங் ( மீரட்). பிஜேந்திர சிங் ( அலிகர்), ஜஸ்வீர் வால்மீகி ( ஹத்ராஸ்), மற்றும் தரோகா சரோஜ் (லால்கஞ்ச்), பெயர் அடங்கிய பட்டியல் அக்கட்சியின் ‛எக்ஸ்'' வலைதளத்தில் வெளியாகியுள்ளது.

