ADDED : பிப் 06, 2025 11:32 PM

ஆம் ஆத்மி டில்லி ஒரு குப்பைத் தொட்டியாக மாறிவிட்டது. நகரம் தற்போது மோசமான நிலையில் உள்ளது. இதை டில்லி மக்கள் நன்கு அறிவார்கள். தேசிய தலைநகருக்கு உண்மையிலேயே உழைப்பவர்களுக்கு டில்லி மக்கள் புத்திசாலித்தனமாக ஓட்டுப்போட்டு உள்ளனர் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் முன்கூட்டியே வெளியாகிவிட்டன. அது சரியாகவோ அல்லது தவறாகவோ இருக்கலாம். தேர்தல் முடிவுகளுக்காக நாம் காத்திருக்க வேண்டும்.
சுவாதி மாலிவால்,
ராஜ்யசபா எம்.பி.,
ஆம் ஆத்மி
கருத்துக்கணிப்பை நம்பவில்லை!
இது மோடி அலை. பிரதமர் நரேந்திர மோடியின் கீழ் நாட்டின் பிற பகுதிகளில் வளர்ச்சி ஏற்பட்டதைப் போலவே, டில்லி மக்களும் வளர்ச்சியை விரும்புகிறார்கள். கெஜ்ரிவாலைப் பார்த்து மக்கள் சோர்வடைந்துள்ளனர். எங்கள் கட்சித் தொண்டர்களின் கடின உழைப்பும், எங்கள் தலைவர்களின் வழிகாட்டுதலும், உத்தியும் பலனைத் தந்துள்ளன. இந்தக் கருத்துக்கணிப்புகளை நான் நம்பவில்லை, எங்கள் இடங்களின் எண்ணிக்கை மேலும் உயரும். பாஜக 50 இடங்களைத் தாண்டும்.
ரமேஷ் பிதுரி
பா.ஜ., வேட்பாளர்
மீண்டும் ஆம் ஆத்மி ஆட்சி!
டில்லியில் ஆட்சியை ஆம் ஆத்மி கட்சி தக்க வைத்துக் கொள்ளும் என்ற நம்பிக்கை உள்ளது. 2013, 2015ல் நாங்கள் தோற்கடிக்கப்படுவோம் என்று கருத்துக்கணிப்புகள் கூறின. 2020ம் ஆண்டில், கருத்துக்கணிப்புகள் கூறியதை விட அதிக இடங்களைப் பெற்றோம். இந்தத் தேர்தலிலும், எங்களுக்கு குறைவான இடங்கள் கிடைப்பதாகக் காட்டப்படுகிறது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் எப்போதும் ஆம் ஆத்மி கட்சிக்கு குறைவான இடங்கள் கிடைக்கும் என்பதைக் காட்டியுள்ளன.
சவுரப் பரத்வாஜ்,
நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர்,
ஆம் ஆத்மி.
குறைத்து மதிப்பீடு!
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளின்படி, பா.ஜ., ஆட்சி அமைக்கக்கூடும். ஆனால் ஆம் ஆத்மி கட்சியை குறைத்து மதிப்பிட்டுள்ளன. அக்கட்சியை மிகவும் பலவீனமாகக் காட்டியுள்ளன. கருத்துக்கணிப்புகள் துல்லியமாக இருக்காது. அவர்களின் நிலைமை கருத்துக்கணிப்புகள் கூறியபடி மோசமாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. அதனால் கணிப்புகள் மீது நான் ஏமாற்றமடைந்துள்ளேன். காங்கிரஸ் கட்சி, 17 முதல் 18 சதவீத ஓட்டுக்களை எளிதாக பெறும்.
சந்தீப் தீட்சித்,
காங்கிரஸ் தலைவர்
டில்லி சட்டசபைத் தேர்தல் முடிவுகள் ஆம் ஆத்மி, பா.ஜ., ஆகிய இரண்டு கட்சிகளுக்குமே எதிராக இருக்கும். ஓட்டுப்பதிவுக்கு பிந்தைய கணக்கெடுப்புகளை நாங்கள் நம்பவில்லை. காங்கிரஸ் சிறப்பான வெற்றி பெறும் என்று நாங்கள் நம்புகிறோம். மக்களின் தீர்ப்பு இரு கட்சிகளுக்கும் எதிராக இருக்கும். ஏனெனில் அவர்கள் காற்று மாசுபாடு மற்றும் யமுனா உள்ளிட்ட பிரச்னைகளில் சரியாக செயல்படவில்லை.
பிரமோத் திவாரி,
காங்கிரஸ் எம்.பி.,

