ADDED : செப் 13, 2025 02:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு:கேரளா குண்டளை அணை நிரம்பியதால் ஒரு ஷட்டர் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டது.
மூணாறு டாப் ஸ்டேஷன் ரோட்டில் 20 கி.மீ., தொலைவில் உள்ள குண்டளை அணை முக்கிய சுற்றுலா பகுதியாகும். அதனை கேரள மின்வாரியத்தினர் பராமரிக்கின்றனர். இந்த அணை தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழை என இரண்டு கட்டங்களாக நிரம்புவது வழக்கம். தற்போது நீர்மட்டம் 62 அடியாகி அணை நிரம்பியதால் நேற்று ஒரு ஷட்டர் திறக்கப்பட்டு 0.34 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் குண்டளை ஆற்று வழியாக மாட்டுபட்டி அணையில் வந்து சேரும். மாட்டுபட்டி அணையில் நீர்மட்டம் உயர்ந்ததால் ஜூலை 28ல் ஒரு ஷட்டர் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதற்குமுன் குண்டளை அணை கடந்தாண்டு ஆக.14ல் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.