'முஸ்லிம்களிடம் ஓட்டு கேட்க குமாரசாமிக்கு தகுதி இல்லை'
'முஸ்லிம்களிடம் ஓட்டு கேட்க குமாரசாமிக்கு தகுதி இல்லை'
ADDED : நவ 01, 2024 11:18 PM

ராம்நகர்; ''பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்து கொண்டு முஸ்லிம்களிடம் ஓட்டு கேட்க, மத்திய அமைச்சர் குமாரசாமிக்கு தகுதி இல்லை,'' என்று, அமைச்சர் ஜமீர் அகமதுகான் கூறினார்.
ராம்நகரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
தேர்தலில் போட்டியிடவே மாட்டேன் என்று கூறிய குமாரசாமி மகன் நிகில், சென்னப்பட்டணா தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுகிறார். என்னை வெற்றி பெற செய்யுங்கள் என்று பிரசாரத்தின் போது கண்ணீர் விடுகிறார்.
தேவகவுடா, குமாரசாமி ரத்த வாரிசான நிகிலிடமிருந்து கண்ணீரை தவிர வேறு எதை எதிர்பார்க்க முடியும். காங்கிரஸ் வேட்பாளர் யோகேஸ்வர், ஐந்து முறை எம்.எல்.ஏ.,வாக வெற்றி பெற்றவர். ஏரிகளை நிரப்ப நடவடிக்கை எடுத்துள்ளார்.
கடந்த இரண்டு தேர்தலிலும் அவர் தோற்று போனார். எம்.எல்.சி., பதவியில் இருந்து தொகுதி மக்களுக்கு எதுவும் செய்ய முடியாது என்பதால், அந்த பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
சென்னப்பட்டணா எம்.எல்.ஏ., பதவியை குமாரசாமி, யாரை கேட்டு ராஜினாமா செய்தார். மகனின் வெற்றிக்காக தர்காவுக்கு சென்று சிறப்பு பிரார்த்தனை செய்கிறார். ஆனால் அவர் கூட்டணி வைத்திருக்கும் பா. ஜ., தலைவர்கள், முஸ்லிம்கள் ஓட்டு தங்களுக்கு வேண்டாம் என்கின்றனர்.
முஸ்லிம்கள் ஓட்டு தனது மகனுக்கு வேண்டும் என்று பா.ஜ., தலைவர்கள் விஜயேந்திரா, எத்னால், ரவி ஆகியோரிடம் கூற குமாரசாமிக்கு தைரியம் இருக்கிறதா.
கடந்த சட்டசபை தேர்தல் முடிந்தபின் முஸ்லிம்கள் ஓட்டு தனக்கு வேண்டாம் என்று கூறியவர் தான் அவர்.
இதனால் முஸ்லிம்களிடம் ஓட்டு கேட்க அவருக்கு தகுதி இல்லை.
சண்டூர் தொகுதிஇடைத்தேர்தலில் போட்டியிடும் அவரது மனைவி அன்னபூர்ணாவை மக்கள் வெற்றி பெற செய்வர். முதல்வர் சித்தராமையா சண்டூரில் 7, 8ம் தேதிகளில் பிரசாரம் செய்வார்.
இவ்வாறு அவர் கூறினார்.

