ஒரு காலத்தில் விற்பனை வரி , வாட் வரி விதிக்கப்பட்ட பொருட்கள்: இப்போது வரி முற்றிலும் நீக்கம்
ஒரு காலத்தில் விற்பனை வரி , வாட் வரி விதிக்கப்பட்ட பொருட்கள்: இப்போது வரி முற்றிலும் நீக்கம்
UPDATED : செப் 23, 2025 10:25 PM
ADDED : செப் 23, 2025 04:49 PM

சென்னை: ஜிஎஸ்டி அமல் செய்வதற்கு முன்னர், பல பொருட்களுக்கு விற்பனை வரி வாட் வரி விதிக்கப்பட்டு இருந்தது. அவ்வாறு வரி வசூலிக்கப்பட்ட அத்தியாவசிய பொருட்கள் பலவற்றுக்கு இப்போது மத்திய அரசு வரி முற்றிலும் நீக்கியுள்ளது.
கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர், வாட்( மதிப்பு கூட்டப்பட்ட வரி) கலால் வரி, செஸ், விற்பனை வரி( சேல்ஸ் டாக்ஸ்) என பல வரிகள் இருந்தன. இதன் காரணமாக பல பொருட்களுக்கு அதிக வரி வசூலிக்கப்பட்டு வந்தது. மேலும், மாநில எல்லைகளில் இருந்த சோதனைச் சாவடிகளால், சரக்கு வாகனங்கள் போய்ச் சேர 15--20 நாட்கள் தாமதமாகின.
இது போன்வற்றை தவிர்க்க கடந்த 2017 ம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான அரசு, நாட்டில் ஜிஎஸ்டியை அமல்படுத்தியது. அதில், 5,12, 18, 28 என்ற நான்கு அடுக்குகள் இருந்தன. தற்போது, தொடர்ச்சியான ஆய்வுக்கு பிறகு தற்போது ஜிஎஸ்டியில் மத்திய அரசு மறுசீரமைப்பு செய்துள்ளது.
அதில் 4 அடுக்கு வரியானது, 5 மற்றுமு் 18 என இரு அடுக்குகளாக குறைக்கப்பட்டது. இது நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. 90 சதவீத பொருட்கள் 5 சதவீத வரம்புக்குள் வந்துள்ளன. அத்தியாவசிய பொருட்கள், 33 விதமான உயிர்காக்கும் மருந்துகள், உள்ளிட்டவற்றுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி அமல்படுத்துவதற்கு முன்னர், அத்தியாவசிய பொருட்கள், உயிர்காக்கும் மருந்துகளுக்கு வரி வசூலிக்கப்பட்டு வந்தது. அதன் விலையும் அதிகமாக காணப்பட்டது. 2017 ல் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட போது அதன் மீது குறைந்த வரியே நிர்ணயம் செய்யப்பட்டது. . தற்போதைய ஜிஎஸ்டி சீரமைப்பில் அந்த வரிகளும் முற்றிலும் ரத்து செய்யப்பட்டது. இதனால், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகளின் விலை குறைந்துள்ளது ஏழை மக்களுக்கு நிம்மதியை கொடுத்துள்ளது. அவர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர்.
விற்பனை வரி, வாட் வரி விதிக்கப்பட்ட காலங்களில் பால் பால் பொருட்களுக்கு 4-6% வரி விதிக்கப்பட்ட நிலையில் தற்போது ஜிஎஸ்டி சீரமைப்பில் ஜீரோ ஆக்கப்பட்டு உள்ளது.
அதேபோல், முட்டை காய்கறி பழம்: 2.5- 6%,
கல்வி மருத்துவ சேவைகள் : 0- 6% ,
உயிர்காக்கும் மருந்துகள்:5-8%,
முந்திரி, திராட்சை, டீ: 6-7%,
பன்னீர், பரோட்டா : 4 -8%
காப்பீடு : 9-15% என விற்பனை வரி மற்றும் வாட் வரி வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது, ஜிஎஸ்டி சீரமைப்பில் வரிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு பூஜ்ஜியமாக்கப்பட்டுள்ளது.